Home Political About Vijay’s political entry: தளபதி விஜய் அரசியல் வருகை பற்றி தாயார் ஷோபா சந்திரசேகர்...

About Vijay’s political entry: தளபதி விஜய் அரசியல் வருகை பற்றி தாயார் ஷோபா சந்திரசேகர் கூறும் கருத்து

104
0

Vijay: தளபதி விஜய் தற்போது தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்துள்ளார். வருகிற ஆண்டு 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். வாரிசு படத்துடன் அஜித் நடித்திருக்கும் துணிவு திரைப்படமும் பாக்ஸ் ஆபீஸில் மோதலை சந்திக்கவுள்ளது.

Also Read: மிகவும் எதிர்பார்க்கும் வாரிசு ட்ரெய்லர் இந்த தேதியில் வெளியாகும்

வாரிசு படத்தை தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67-ஆவது படத்தில் நடிக்கவுள்ளார். கூடியவிரைவில் பூஜையுடம் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது. கங்ஸ்டர் கதை காலத்தில் உருவாகும் இப்படத்தின் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ். கூடியவிரைவில்
தளபதி 67 பற்றின தகவல் அதிகாரபூர்வமாக அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ  Thalapathy Vijay: இந்த காரணத்தால் 'GOAT' படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவை தவிர்க்கும் விஜய்

About Vijay's political entry: தளபதி விஜய் அரசியல் வருகை பற்றி தாயார் ஷோபா சந்திரசேகர் கூறும் கருத்து

விஜய்யின் தாயாரான ஷோபா சந்திரசேகர் தற்போது விஜயின் அரசியல் ஈடுபாடு பற்றி கருத்து தெரிவித்துள்ளார். பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் ஷோபா சந்திர சேகர். பின் அங்கு பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களின் கேள்விக்கு பதில் கூறினார். விஜயின் அரசியல் ஈடுபாடு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் கூறிய ஷோபா சந்திர சேகர், அதைப்பற்றி ஒன்னுமே தெரியாது. என்று கூறினார். மேலும் அரசியலில் ஆலோசனை எதாவது? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், அதெல்லாம் ஒன்னுமே கிடையாது, “விஜய் என்ன முடிவு எடுக்கிறாரோ அதான், கடவுள் என்ன நினைக்கிறாரோ அதான்” என்று பதில் கூறிவிட்டார்.

Leave a Reply