ரஜினிகாந்த் தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வது குறித்து வழக்கறிஞர்களுடன் போயஸ் கார்டனில் உள்ள வீட்டில், இன்று ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து ராகவேந்திரா மண்டபத்திற்குச் சென்ற ரஜினிகாந்த், நிர்வாகிகளுடன் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன மூர்த்தி, மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது கட்சியின் தலைவர், பொருளாளர், பொதுச்செயலாளர் என மூன்று முக்கியமான பதவிகளில் யாரை நியமிப்பது என்பது குறித்து கருத்து கேட்டதாக தெரிகிறது.
Also Read: முடிவை மாற்றிக் கொண்ட ரஜினிகாந்த்: டிசம்பர் 15ம் தேதி துவங்குகிறார்கள்
இதனிடையே கட்சி தொடர்பான போஸ்டர்களில் ரஜினியின் புகைப்படத்தை மட்டும் பயன்படுத்தினால்போதும், தன் படத்தையோ, தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூன மூர்த்தியின் புகைப்படத்தையோ பயன்படுத்த வேண்டாம் என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் அறிவுறுத்தியுள்ளார்.