எஸ். ஏ சந்திரசேகருக்கும் தளபதி விஜய்க்கும் கருத்துவேறுபாடு உள்ளது என்று அவரது தாய் ஷோபா உருதிபடுதியுள்ளார்.
‘அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தேர்தல் ஆணையத்தில் கட்சியொன்றை பதிவு செய்துள்ளார். இந்த விவகாரத்தால் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இரண்டுநாட்களுக்கு முன் தளபதி விஜய் ஓர் அறிக்கை வெளியிடிருந்தார் தந்தையின் கட்சிக்கும் எனக்கும் சம்மந்தம் இல்லை என்றும், எனது பெயரையோ புகைபடதையோ உபயோகித்தால் நடவடிக்கை எடுப்பேன் என்று விஜய் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் தனது ரசிகர்களை தந்தையின் கட்சியில் இணைய வேண்டாம் என்றும் கட்சி பணியாற்ற வேண்டாம் என்று விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் விஜயின் தாயார் ஷோபா, கணவர் எஸ்.ஏ சந்திரசேகருக்கும் விஜய்க்கும் கருத்துவேறுபாடு இருப்பதை ஒரு பேட்டி மூலம் உறுதிபடுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக விஜயின் தாயார் கொடுத்த பேட்டியில்: ‘அசோசியேஷன் ஆரம்பிக்கிறேன் அதற்கு கையெழுத்து வேண்டும் என்று என் கணவர் என்னிடம் கையெழுத்து கேட்டார். நல்ல விஷயம்தானே என்று நானும் கையெழுத்து போட்டேன. ஒரு வாரத்துக்கு முன்பு மற்றொரு கையெழுத்து வேண்டும் என்று கேட்டார் கட்சி பதிவு செய்வதற்கு என்று நன் புரிந்துகொண்டேன்.
விஜய்க்கு தெரியாமல் செய்வதால் நான் கையெழுத்து போடமாட்டேன் என்று என் கணவரிடம் கூறிவிட்டேன். முதலில் போட்டுகொடுத்த கையெழுத்தை கூட நான் வாபஸ் வாங்கி கொள்கிறேன் என்று கூறிவிட்டேன். இதனால் நான் கட்சிக்கு பொருளாளர் கிடையாது. எனக்கு பதிலாக வேறொருவரை பொருளாளராக நியமிப்பதாக என்கணவர் கூறிவிட்டார்.
அரசியல் விஷயங்களை மீடியாக்களில் பேச வேண்டாம் என்று விஜய் பலதடவை கூறியுள்ளார். அனால் என் கணவர் விஜய் பேச்சை மீறி பேசிகொண்டிருக்கிறார். அதனால் தான் விஜய் தனது தந்தையிடம் பேசுவதில்லை. விஜய் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று விஜய்யிடம் தான் கேட்கவேண்டும் விஜயின் தாயார் ஷோபா தெரிவித்துள்ளார்.