- சன் பிக்சர்ஸ் இந்தியாவின் முன்னணி மருத்துவமனை அப்பல்லோ மருத்துவமனைகளுக்கு ரூ.1 கோடியை நன்கொடை
- வசதியற்ற 100 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு உதவும் என்று கூறப்படுகிறது
Sun Pictures: முன்னணி தமிழ்த் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், ரஜினியின் ஜெயிலர் படத்தின் வரலாற்று வெற்றியை கொண்டாடி வருகிறது. இப்படம் 25 நாட்களில் ரூ.600 கோடி நெருங்கி வசூல் செய்து. இன்னும் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூலில் சாதனை படைத்து வருகிறது. சன் பிக்சர்ஸ் தலைவர் கலாநிதி மாறன் சமீபத்தில் ரஜினி, ஜெயிலர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் ஆகியோருக்கு கூடுதல் சம்பளம் மற்றும் புதிய BMW X7 மற்றும் Porsche கார்களை பரிசாக கொடுத்து ஆச்சரியப்படுத்தினார்.
சன் பிக்சர்ஸின் மனதைக் கவரும் விஷயம் ஒன்று, தற்போது அனைவரையும் கவர்ந்துள்ளது. முன்னணி தயாரிப்பு நிறுவனம் இந்தியாவின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான அப்பல்லோ மருத்துவமனைகளுக்கு ரூ.1 கோடியை நன்கொடையாக வழங்கியது. இந்த தொகையானது அப்பல்லோவில் வசதியற்ற 100 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சைக்கு உதவும் என்று கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் சார்பில் திருமதி காவேரி கலாநிதி அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டியிடம் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.