Home Health Mani Ratnam: இயக்குனர் மணிரத்னம் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

Mani Ratnam: இயக்குனர் மணிரத்னம் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

0

Mani Ratnam: கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் மீண்டும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தற்போது இயக்குனர் மணிரத்னம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Also Read: Nayanthara: திருமணத்திற்கு பிறகு நயன்தாரா சம்பளம் – எத்தனை கோடி தெரியுமா?

பிரபல இயக்குனர் மணிரத்னம் கொரோனாவால் இன்று மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். இருப்பினும், கவலைப்படத் தேவையில்லை என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மணிரத்னத்திற்கு கோவிட்-19 பாசிட்டிவ் என்று தெரிந்தவுடன், அவரது குடும்பத்தினர் அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அனுபவம் வாய்ந்த மருத்துவர்களின் மேற்பார்வையில் மணிரத்னத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Mani Ratnam: இயக்குனர் மணிரத்னம் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

மணிரத்னத்திற்கு தமிழ் மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர் நடித்த படங்கள் இதர மொழிகளில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி உள்ளது. இந்நிலையில் தற்போது செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் ‘பொன்னியன் செல்வன்’ படத்திற்காக அனைவரும் காத்திருக்கின்றனர். புரொடக்‌ஷன் வேலைகளில் பிசியாக இருந்த நிலைய்ல் தற்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது படக்குழுவினரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: Ponniyin Selvan-1: மணிரத்னம்-சியான் விக்ரம் ஆகியோருக்கு கோர்ட் நோட்டீஸ்

இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version