2026 ஐசிசி டி20 உலகக்கோப்பை: இந்தியா–இலங்கை இணைந்து நடத்தும் வரலாற்றுப் போட்டி! 🏏🔥
T20 World Cup 2026: 2026 ஆம் ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கான மிகப்பெரிய திருவிழா வர இருக்கிறது. 10-வது ஐ.சி.சி டி20 உலகக்கோப்பை போட்டியை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்த உள்ளன. பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெற உள்ள இந்த மாபெரும் தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா தற்போதைய சாம்பியன் என்பதால், நாட்டில் எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்திருக்கிறது.
T20 World Cup 2026: உலகின் 20 சக்திவாய்ந்த அணிகள் ஒரே மேடையில் 🌍
இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா போன்ற முன்னணி cricket nations-க்கு இணையாக, முதல் முறையாக தகுதி பெற்றுள்ள இத்தாலி அணியும் இத்தொடரில் பங்கேற்கிறது.
20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் முறையில் மோதுகின்றன. ஒவ்வொரு பிரிவிலிருந்தும் முன்னிலை 2 அணிகள் சூப்பர்–8 சுற்றுக்கு முன்னேறும்.
இந்தியா–பாகிஸ்தான் அதிரடி டக்கர் மீண்டும்! 🇮🇳 vs 🇵🇰
இந்த முறை ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா–பாகிஸ்தான் மோதல் பிப்ரவரி 15–ந்தேதி கொழும்பு மைதானத்தில் நடைபெற உள்ளது.
Also Read: AIADMK internal war: செங்கோட்டையன் விஜய்யுடன் கைகோர்ப்பு – OPS-ன் அடுத்த அடி?🔥
இந்திய அணியின் லீக் அட்டவணை:
- பிப்ரவரி 7 – அமெரிக்கா (மும்பை)
- பிப்ரவரி 12 – நமீபியா (டெல்லி)
- பிப்ரவரி 15 – பாகிஸ்தான் (கொழும்பு)
- பிப்ரவரி 18 – நெதர்லாந்து (அகமதாபாத்)
இவை அனைத்தும் ரசிகர்கள் கண்காணிக்கும் முக்கிய ஆட்டங்களாகும்.
T20 World Cup 2026: இந்தியா, இலங்கை இணைந்து நடத்தும் இடங்கள் 🏟️
இந்தியாவில்:
- அகமதாபாத்
- சென்னை
- கொல்கத்தா
- மும்பை
- டெல்லி
இலங்கையில்:
- கொழும்பு
- கண்டி
2026 டி20 உலகக்கோப்பை–க்கு தகுதி பெற்ற 20 அணிகள்
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், கனடா, இத்தாலி, நெதர்லாந்து, நமீபியா, ஜிம்பாப்வே, நேபாளம், ஓமன், யுஏஇ.



