Home Political Rajinikanth: முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவிற்கு ரஜினிகாந்த்

Rajinikanth: முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவிற்கு ரஜினிகாந்த்

173
0

Rajinikanth: ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்கவுள்ள சந்திரபாபு நாயுடு இன்று விஜயவாடாவில் பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடியை தவிர பல துறை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு வெற்றி பெற வாழ்த்து தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், செவ்வாய்கிழமை (நேற்று) மாலை விஜயவாடாவுக்கு பயணம் செய்தார். மேலும் ரஜினிகாந்துடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் சந்திரபாபு நாடு முதல்வராக பதவியேற்பதைக் காணவுள்ளார்.

Rajinikanth: முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவிற்கு ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் தவிர, சிரஞ்சீவி, ராம் சரண், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ஜூனியர் என்.டி.ஆர், பவன் கல்யாம் ஆகியோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது, மேலும் அவர்கள் நிகழ்விடத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாண் துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் கடந்த மாதம் ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பை முடித்த அவர், படத்தின் டப்பிங் பணிகள் விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது. TJ ஞானவேல் இயக்கத்தில், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ராணா டகுபதி, ஃபகத் பாசில், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இதற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். மேலும் லோகேஷ் கனகராஜுடன் தனது அடுத்த படமான ‘கூலி’ படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

ALSO READ  Kubera: சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'குபேரா' டீசர் இந்த தேதியில் வெளியாகும்

 

Leave a Reply