Home Entertainment Varisu Big Promotional event: விஜய்யின் வாரிசு படத்தின் மிக பெரிய விளம்பர நிகழ்ச்சி திட்டம்...

Varisu Big Promotional event: விஜய்யின் வாரிசு படத்தின் மிக பெரிய விளம்பர நிகழ்ச்சி திட்டம் – ஹாட் அப்டேட்

77
0

Varisu: தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி நேற்று தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது. அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, தமிழ் மற்றும் தெலுங்கு ட்ரெய்லர்கள் யூடியூப்பில் 24 மணி நேரத்தில் 1.8 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளுடன் 32 மில்லியனுக்கும் அதிகமான ரியல்-டைம் வியூஸ் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். ‘வாரசுடு’ தெலுங்கு பதிப்பின் பிரமாண்டமான ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெறும் என்று ஏற்கனவே செய்திகள் படித்தோம். தற்போது ​​​​சமீபத்திய செய்தி என்னவென்றால், ஜனவரி 8 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஒரு திறந்த மைதானத்தில் விளம்பர நிகழ்வை (புரோமோஷன் ஈவண்ட்) நடத்த குழு திட்டமிட்டுள்ளது.

ALSO READ  Breaking: பிரபல நகைச்சுவை நடிகர் மனோபாலா திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி.!

Also Read: சிம்புவின் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ஃபாஸ்ட் சிங்கிள் இந்த நேரத்தில் வெளியாகும்

இந்த விழாவில் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி, தயாரிப்பாளர் தில் ராஜு உள்ளிட்ட மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொள்கின்றனர். இந்த விழாவில் தளபதி விஜய் கலந்து கொள்வார் மற்றும் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்றும் சில தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் அறிவிக்கவில்லை இல்லை. இப்படம் ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளுக்குள் வரவுள்ளது என்று தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ALSO READ  National Awards: ஐந்து தேசிய விருதுகளை வென்ற சூரரைப் போற்று - 68 வது தேசிய விருதுகள் அறிவிப்பு

Varisu Big Promotional event: விஜய்யின் வாரிசு படத்தின் மிக பெரிய விளம்பர நிகழ்ச்சி திட்டம் - ஹாட் அப்டேட்

ரஷிமா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார், பிரகாஷ் ராஜ் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் வில்லனாக இணைகிறார். மற்றும் நட்சத்திர நடிகர்கள் சரத்குமார், ஷாம், யோகி பாபு, VTV கணேஷ், SJ சூர்யா, குஷ்பு மற்றும் பலர் நடித்துள்ளனர். கார்த்திக் பழனியின் காட்சியமைப்பிலும், பிரவீன் கே.எல் எடிட்டிங் கணிக்க, எஸ். தமன் இசையமைத்துள்ளார்.

Leave a Reply