Home Entertainment Nayanthara: நயன்தாரா மருத்துவமனையில் திடீர் அனுமதி – வாந்தி எடுக்க காரணம் என்ன?

Nayanthara: நயன்தாரா மருத்துவமனையில் திடீர் அனுமதி – வாந்தி எடுக்க காரணம் என்ன?

51
0

Nayanthara: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தீடீர் என்று வாந்தி எடுத்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார் என்ற தகவல் தற்போது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துக்கொண்டார். மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் அவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது. அவர்களது திருமணத்திற்கு ஷாருக்கான், ரஜினிகாந்த், சூர்யா, ஜோதிகா உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர். இவர்களது திருமண நிகழ்ச்சி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியது.

Nayanthara: நயன்தாரா மருத்துவமனையில் திடீர் அனுமதி - வாந்தி எடுக்க காரணம் என்ன?

நானும் ரவுடிதான் படத்தில் பணிபுரிந்த போது விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது. அதை தொடர்ந்து பல வெளியூர்களுக்கு சென்று இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். அதை தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு தாய்லாந்திற்க்கு ஹனிமூன் சென்ற போது அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டனர். அதன் பின் இருவரும் தனது வேளைகளில் கவனம் செலுத்தி வந்தனர்.

ALSO READ  Kalki 2898 AD: கல்கி 2898 AD ஒரு காவியத் திரைப்படம் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு

Also Read: கார்த்தியின் கைதி 2 படப்பிடிப்பு இந்த நேரத்தில் தொடங்குகிறது

இந்த நிலையில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா வாந்தி எடுத்ததன் காரணமாக தீடிரென்று மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நயன்தாரா சாப்பிட்ட சாப்பாடு ஒவ்வாமை காரணமாக வாந்தி ஏற்பட்டதாகவும், பின் அவரது கணவரான விக்னேஷ் சிவன் நயன்தாராவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் ஒருசில மணிநேரம் சிகிச்சை அளித்து மருத்துவர்கள் நயன்தாராவை டிஸ்சார்ச் செய்ததாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் இச்செய்தி நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனால் உறுதி செய்யப்படவில்லை.

ALSO READ  Dhanush: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-தனுஷ் வழக்கை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்

Nayanthara: நயன்தாரா மருத்துவமனையில் திடீர் அனுமதி - வாந்தி எடுக்க காரணம் என்ன?

விக்னேஷ் சிவன் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கவிருப்பதால் அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் தற்போது நடந்து வருகிறது. நயன்தாரா தற்போது ஷாருக்கான் நடிக்கும் ஜாவான் படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமண வீடியோ கூடிய விரைவில் நெட்பிளிக்ஸ்சில் வெளியாக உள்ளது. என்று நேற்று வீடியோவின் கிளிம்ஸ் வெளியிட்டு உறுதி செய்துள்ளனர்.

Leave a Reply