Home Entertainment STR: பத்து தல ரிலீசுக்கு பிறகு சிம்புவின் கல்யாணம்?

STR: பத்து தல ரிலீசுக்கு பிறகு சிம்புவின் கல்யாணம்?

81
0

STR: தென் இந்தியா திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிம்பு. சிறுது காலமாக மார்க்கெட்டில் சரிந்த சிம்பு, மாநாடு, ஈஸ்வரன் போன்ற படங்கள் மூலம் தனது மார்க்கெட்டை மீண்டும் தக்க வைத்துள்ளார். அவரது திரைபடங்களை தாண்டி அவரை பற்றின திருமண வதந்திகள் வந்ததுகொண்டுதான் இருக்கிறது. இப்போது, சிம்பு பத்து தல வெளியீட்டிற்குப் பிறகு திருமணம் செய்யவுள்ளார் என்று பேசப்படும் தகவலால் இணையத்தின் கவனத்தை ஈர்த்தார்.

பத்து தல படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினருடன் கலந்து கொண்டார் சிம்பு. இந்த நிகழ்வின் போது, ​​இயக்குனர் கிருஷ்ணாவுடன் பணிபுரியும் ஒவ்வொரு நடிகரும் எப்படி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்ற விசித்திரமான தற்செயல் நிகழ்வை படத்தின் எழுத்தாளர் பகிர்ந்து கொண்டார். சூர்யா, ஜோதிகா, ஆரி மற்றும் ஷிவாடா, கௌதம் கார்த்திக் போன்ற நடிகர்கள் இயக்குனர் கிரிஷ்ணாவுடன் பணிபுரிந்த பிறகு திருமணம் செய்து கொண்டனர். என்று கூறுகையில், உடனே சிம்பு, “மொதலையே சொல்லிருக்க கூடாதா” என்று கூறினார்.

ALSO READ  காதலனுக்கு இரண்டு கண்டிஷன் போட்ட பிரியா பவானி சங்கர்

STR: பத்து தல ரிலீசுக்கு பிறகு சிம்புவின் கல்யாணம்?

சில வருடங்களுக்கு முன் சிம்புவுடன் நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி போன்ற பல நடிகைகளுடன் இணைந்து இருக்கிறார் என்று பேசபட்டது. அவர், கடந்த காலங்களில் முன்னணி நடிகைகளுடன் பல தீவிர உறவுகளை வைத்திருந்தார், ஆனால் கடைசி வரை எதுவும் பலனளிக்கவில்லை. உண்மையில், கடந்த ஆண்டு, ஜனவரியில், அவர் தெலுங்கு நடிகை நிதி அகர்வாலுடன் திருமணம் செய்து கொள்ளத் தயாராகிவிட்டார் என்று கிசுகிசுகள் பரபரப்பாக பேசப்பட்டன. ஆனால அது வெறும் வதந்தியாகவே இருந்தது.

Leave a Reply