Home Entertainment Nayanthara: ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் – காரணம் இதுதான்

Nayanthara: ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் – காரணம் இதுதான்

82
0

Nayanthara: நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இன்று காலை ஸ்பெயின் நாட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளனர். பத்து நாட்கள் அங்கேயே தங்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

நீண்ட நாட்களாக காதல் ஜோடிகளாக வலம்வந்து கொண்டிருந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். அவர்களது திருமணத்திற்கு ஷாருக்கான், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சூரியா,ஜோதிகா ஆகிய முக்கிய பிரபலங்கள் வருகை தந்திருந்தனர். திருமணம் முடிந்த கையோடு திருப்பதி கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்து செருப்பு காலணியுடன் கோவிலுக்கு சென்றதால் சர்ச்சையில் சிக்கிக்கொண்டார் நயன்தாரா.

ALSO READ  Vijay: லியோ அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் பிரமிக்க வைக்கும் முன்பதிவு டிக்கெட்டுகள் விற்பனை

Nayanthara: ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் - காரணம் இதுதான்

பின் தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்று அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுவந்தனர். தற்போது இந்த நட்சத்திர ஜோடி ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா புறப்பட்டு சென்றுள்ளனர். திருமணத்திற்கு முன்பும் பல வெளிநாடுகளுக்கும் கோவிலுக்கும் சுற்றுலா சென்று புகைப்படங்கள் எடுத்துகொண்டு அதை வெளியிட்டு வந்தனர். தற்போது 10 நாட்கள் பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றிருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் புகைப்படங்களை வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Also Read: நயன்தாரா மருத்துவமனையில் திடீர் அனுமதி – வாந்தி எடுக்க காரணம் என்ன?

பாலிவுட் ஷாருக்கான் நடிக்கும் ஜாவான் படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார். ஸ்பெயின் சுற்றுப்பயணம் முடிந்ததும் ஜாவான் படத்தின் அடுத்தகட்ட பப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கபடுகிறது. விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இயக்கிய பின் அஜித்தின் அடுத்த படத்திற்கான வேலைகளை ஈடுபட்டுள்ளார். சென்னை திரும்பியதும் அதன் வேலைகளை தொடங்குவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

ALSO READ  National Awards: ஐந்து தேசிய விருதுகளை வென்ற சூரரைப் போற்று - 68 வது தேசிய விருதுகள் அறிவிப்பு

Nayanthara: ஸ்பெயின் நாட்டிற்கு சென்ற நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் - காரணம் இதுதான்

நேற்று தான் நயன்தாரா வாந்தி எடுத்தான் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார் என்ற செய்தி வைரலானது ஆனால் விக்னேஷ் சிவம் மற்றும் நயன்தாரா தரப்பில் இருந்து அதை உறுதிபடுத்தவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply