Home Entertainment Vikram 100 Days: விக்ரம் 100வது நாளில் கமல்ஹாசனின் சிறப்பு ஆடியோ செய்தி

Vikram 100 Days: விக்ரம் 100வது நாளில் கமல்ஹாசனின் சிறப்பு ஆடியோ செய்தி

39
0

Vikram 100 Days: சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் கதாநாயகனாக நடித்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்க்கு குடுத்துள்ளார் உலக நாயகன் கமல்ஹசன். சிறந்த நடிகர், தயாரிபாளர் என்று பல விருதுகளை வென்றுள்ளார். கமல் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பின் வெளியான விக்ரம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பபை பெற்று மிகபெரிய பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. கமலின் தீவிர ரசிகரும் இயக்குனருமான லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தை சிறப்பாக இயக்கியதாற்காக விலை உயர்ந்த பரிசுகளை வழங்கினார் கமல்.

Also Read: ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன், வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்ற உள்ளனர்!

விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர், சூர்யா ரோலெக்ஸ் என்ற சிறப்பு வேடத்தில் தோன்றினார். இந்தப் படம் கமல்ஹாசனின் கேரியரில் அதிக வசூல் செய்த படம் மட்டுமல்ல, சமீப காலங்களில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படமாகவும் அமைந்தது. ‘விக்ரம்’ கிட்டத்தட்ட எல்லா மொழிகளில் ஆல் டைம் பிளாக்பஸ்டராக உருவானது. இன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகி 100வது நாளை வெற்றிகரமாக எட்டியுள்ளது.

ALSO READ  Samantha father emotional: சமந்தாவின் விவாகரத்து குறித்து தந்தையின் சமீபத்திய உணர்ச்சிகரமான பதிவு

Vikram 100 Days: விக்ரம் 100வது நாளில் கமல்ஹாசனின் சிறப்பு ஆடியோ செய்தி

கமல்ஹாசன் இன்று காலை தனது சமூக வலைதளபக்கத்தில் ஆடியோவை வெளியிட்டார், விக்ரமைப் பெரிய வெற்றியடையச் செய்த ஊடகங்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் ஆடியோ குறிப்பைப் பகிர்ந்து கொண்டார். அவரது செய்தியில், “வணக்கம், ரசிகர்களின் ஆதரவோடு விக்ரம் படம் 100வது நாளை எட்டியிருக்கிறது. நான் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன். தலைமுறைகள் தாண்டி என்னை ரசிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் மனதளவில் அரவணைக்கிறேன். விக்ரம் படம் வெற்றிக்கு காரணமாக இருந்த ஒவ்வாறுவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள். தம்பி லோகேஷ் அவர்களுக்கு எனது அன்பும் வாழ்த்துகளும்.” என்று கூறியிருந்தார்.

Leave a Reply