PS-1: தேசிய விருது பெற்ற தமிழ் இயக்குனர் வெற்றிமாறன், ராஜ ராஜ சோழன் இந்து மன்னன் இல்லை என்று கூறி சர்ச்சை கருத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கமல்ஹாசன்.
Also Read: பொன்னியின் செல்வன்-1 படத்திற்கு பாராட்டு தெரிவித்த கமல்ஹாசன்
அமரர் கல்கியின் பொன்னியன் செல்வன் நாவலை படமாக பல பேர் முயற்ச்சித்து முடியாமல் போக தற்போது இயக்குனர் மணிரத்னம் அவர்களின் நீண்ட வருட கனவு படமான பொன்னியன் செல்வன் படத்தை இயக்கி சாதனை படைத்துள்ளார். மிகப்பெரிய பொருள் செலவில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது பாக்ஸ் ஆபீஸில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைபடம் வெளிவந்த மூன்றே நாளில் 200 கோடிக்கும் அதிகமான வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
வெற்றிமாறனின் சர்ச்சை கருத்து:
சமீபத்தில் விழா ஒன்றில் பேட்டியளித்த வெற்றிமாறன், ராஜா ராஜா சோழன் இந்து மதம் சார்தவர் இல்லை என்று கூறிய சர்ச்சை கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: ஜெயிலர் படத்திற்கு பிறகு இரண்டு திரைப்படங்களை உறுதி செய்த ரஜினிகாந்த்
வள்ளுவனுக்கு காவி நிறத்தில் உடை அணிவதாக இருக்கட்டும், ராஜ ராஜ சோழன் ஒரு இந்து அரசன் என்று கூறி நம்மிடம் இருந்து பல அடையாளங்களை பரித்துவிடுகிரார்கள். இது சினிமாவிலும் நடக்கிறது என்று பேசினார். அவரது இந்த கருத்து விவாதமாக மாறிய நிலையில் தற்போது பத்திரிகையாளர் சந்திப்பில் வெற்றிமாறனின் கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
கமல் பேட்டி
பொன்னியின் செல்வன் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து விட்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார் கமல். ராஜ ராஜ சோழர் பற்றி வெற்றிமாறன் கூறியது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேள்வி கேட்டனர்.
அதற்கு உலகநாயகன் கமல்ஹாஸன், வெற்றிமாறனின் சர்ச்சை கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் காலத்தில் இந்து மதம் என்ற ஒன்றே இல்லை என்று கூறினார் சைவம், வைணவம், சமணம் போன்ற மூன்று தான் இருந்தது. இந்து என்பது ஆங்கிலேயர் வைத்த பெயர் என்றார். அதோடு கமல்ஹாசன் ஏற்கனவே கமல் விஸ்வரூபம் படத்தின் பத்திரிகையாளர் பேட்டியில் சோழர்கள் பற்றி கூறி இருந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. வெற்றமாரன் கூறிய கருத்துக்கு தற்போது கமல் ஆதரவு கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.