Home Entertainment Rashmika Mandanna: வாரிசு நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய திரையுலக ரசிகர்களை கோபப்படுத்தினர்

Rashmika Mandanna: வாரிசு நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய திரையுலக ரசிகர்களை கோபப்படுத்தினர்

82
0

Rashmika Mandanna: நடிகை ரஷ்மிக்கா கன்னடத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான கிரீக் பார்ட்டி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் தெலுங்கில் கீத்தாகோவிந்தம், பீஷ்மா, புஷ்பா, சோழா ஆகிய பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்துள்ளார். நடிகர் கார்த்திக்குடன் சுல்தான் திரைபடத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார். தற்போது தளபதி விஜய் நடித்திருக்கும் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். வருகிற 2023 பொங்கல் தினத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் படம் வெளியாகும் நிலையில் வாரிசு பட நடிகையான ரஷ்மிக்கா தற்போது தென்னிந்திய ரசிகர்களின் கோபத்திற்க்கு ஆளாகியுள்ளார்.

ALSO READ  Big Official: சென்னையில் ஜவான் படப்பிடிப்பின் போது ரஜினிகாந்தை சந்தித்த தருணத்தை ட்விட் செய்த ஷாருக்கான்

Also Read: த்ரிஷாவின் ராங்கி படத்தின் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது – வைரல் வீடியோ

அவர் குழந்தை பருவத்தில், டீன் ஏஜ் பருவத்தில் ஹிந்தி பாடல்களை விரும்புவதைப் பற்றி பேசுகையில் இவ்வாறு கூறினார். “பாலிவுட்டின் காதல் பாடல்கள், உண்மையான காதல் பாடல்களை உருவாக்குகின்றனர், அதே நேரத்தில் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட சினிமா மசாலா, ஐட்டம் பாடல்களை உருவாக்குகிறது என்று ராஷ்மிகா மந்தனா கூறியுள்ளார். ரஷ்மிக்காவின் தற்போது அந்த வீடியோ கிளிப் வைரலாகி வருகிறது.

Rashmika Mandanna: வாரிசு நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய திரையுலக ரசிகர்களை கோபப்படுத்தினர்

“கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடப் படமும், ‘பீஷ்மா’ போன்ற தெலுங்குப் படங்களும் தான் அவரது கேரியரைப் புத்துணர்ச்சியாக்கியது. தற்போது பாலிவுட்டில் சில படங்களில் நடித்து வருவதால், தென்னிந்திய சினிமாவை அவமதிக்க நினைத்தார்” என்று ஒரு நெட்டிசன் கூறியுள்ளார். மற்றொரு நெட்டிசன், டாப்சி பன்னுவும் கடந்த காலங்களில் இதேபோல் நடந்து கொண்டார் என்று கூறினார். அவர் தனது முதல் இயக்குனரான கே ராகவேந்திர ராவின் உணர்வுகளை அவமரியாதையாக பேசினார். பின்னர் அவர் அதற்காக மன்னிப்பு கேட்டார். ரஷ்மிகாவும் மன்னிப்பு கேட்பாரா?” என்று ஒரு பேஸ்புக் பயனர் கேட்டுள்ளார்.

Leave a Reply