Home Entertainment Thalaiva 2: தலைவா 2 எப்போது தெரியுமா? விஜய் சொன்ன பதிலால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள்!

Thalaiva 2: தலைவா 2 எப்போது தெரியுமா? விஜய் சொன்ன பதிலால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள்!

29
0

Thalaiva 2: விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் படைப்டிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மன்தானா நடிக்கிறார். தில் ராஜு தயாரிப்பில் வம்சி இயக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் தான் தளபதி விஜய் விமான நிலையத்தில் இருந்து படப்பிடிப்புக்கு செல்லும் புகைப்படங்கள் வெளியாகி வைரலானது. வாரிசு படம் 2023 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Also Read: Holy Wound: லெஸ்பியன் காதலை மையமாகக் கொண்ட மலையாளப் படம் ஹோலி வூண்ட் OTT ரிலீஸ் தேதி

கூடிய விரைவில் வாரிசு படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது. விஜய்யுடன் இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். அதோடு 14 வருடம் கழித்து திரிஷா இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கயுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் மீண்டும் இணைய இருப்பதாலும் நீண்ட வருடம் கழித்து திரிஷா விஜயுடன் ஜோடி சேர்வதாலும் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிற செய்துள்ளது.

Thalaiva 2: தலைவா 2 எப்போது தெரியுமா? விஜய் சொன்ன பதிலால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள்!

இந்த நிலையில் விஜய் மற்றும் அமலாபால், சத்யராஜ் நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான தலைவா படம் ரசிகர்களிடையே ஒரு நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் நடித்த பல வெற்றி படங்களில் இது ரசிகர்களின் மனதிற்கு நெருக்கமான படமாக இருந்தது. தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாவது பற்றி விஜய் கூறிய பதிலால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Also Read: சிவகார்த்திகேயன் படமான ‘பிரின்ஸ்’ பற்றிய ஹாட் அப்டேட்ஸ்!

ALSO READ  Valimai: அஜித்தை கடுமையாக விமர்சித்த தயாரிப்பாளர்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்

ஏ.எல் விஜய் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான தலைவா படம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்தது. அதோடு அரசியல் சார்ந்த பல பிரிசனைகளை சந்தித்த தலைவா படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற மாநிலங்களில் படம் வெளியானது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் 10 நாள் கழித்து தான் படம் வெளியிடப்பட்டது. இருந்தாலும் விஜய் ரசிகர்களுக்கு இப்படம் மிகவும் பிடித்த படமாக இருக்கிறது. இந்த நிலையில் தலைவா 2 உருவாகுவது பற்றி ஏ. எல் விஜய் கூறி இருப்பது தற்போது வைரலாகி வருகிறது. 

Thalaiva 2: தலைவா 2 எப்போது தெரியுமா? விஜய் சொன்ன பதிலால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள்!

ஏ.எல் விஜய் கூறியதாவது

தற்போது விஜய்க்காக ஒரு கதை ரெடி பண்ணி வைத்திருக்கிறேன். விஜய் எப்போது ஓகே சொல்கிறாரோ அப்போது கண்டிப்பாக இணைவோம் என்று கூறியுள்ளார். நான் எங்கு சென்றாலும் தலைவா 2 எப்போது என்ற கேள்வி தான் கேட்கிறார்கள் என்று கூறியுள்ளார் ஏ. எல் விஜய். இதனால் இவர்கள் கூட்டணி இணைந்தால் அது கண்டிப்பாக தலைவா படத்தின் இரண்டாம் பாகமாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தளபதி 67க்கு பின் தலைவா 2 உருவாகும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

Leave a Reply