Home Box Office Official: சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் புதிய பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

Official: சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் புதிய பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

139
0

Official: சிவகார்த்திகேயனின் மாவீரன் தனது இரண்டாவது வார ஓட்டத்தில் நுழைந்து இன்னும் டிக்கெட் ஜன்னல்களில் வலுவான வசூலை வெளிப்படுத்தி வருகிறது. ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இந்த ஃபேண்டஸி ஆக்‌ஷன் படத்தை அருண் விஸ்வா தயாரிப்பில் மண்டேலா புகழ் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார்.

Official: சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படத்தின் புதிய பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

தற்போதிய ஹாட் செய்தி என்னவென்றால் தயாரிப்பாளர்கள் வெளியிட்ட சமீபத்திய அப்டேட்டின்படி, மாவீரன் இதுவரை 75 கோடிக்கு மேல் வசூலித்து 100 கோடியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்று அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் புதிய போஸ்டருடன் அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஸ்வா மாவீரன் படத்தை தயாரித்தார். யோகி பாபு, சுனில், மிஷ்கின், சரிதா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஏசியன் சினிமாஸ் மூலம் தெலுங்கில் மகாவீருடு என்ற பெயரில் ஒரே நேரத்தில் வெளியாகி அங்கியும் நல்ல வரவேற்ப்பை வெளியிடப்படுகிறது.

Leave a Reply