Home TV Show Bigg Boss Tamil 6: பிக் பாஸ் இறுதி போட்டியில் டைட்டில் வின்னர் யார் என்று...

Bigg Boss Tamil 6: பிக் பாஸ் இறுதி போட்டியில் டைட்டில் வின்னர் யார் என்று அறிவிக்கப்பட்டது

0

Bigg Boss Tamil 6: ‘பிக் பாஸ் தமிழ் 6’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி உள்ள நிலையில், டைட்டில் வின்னர் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தவர்கள் யார்? என்ற தகவல் புகைப்படங்களுடன் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘பிக் பாஸ் 6’ இன் டைட்டில் வின்னராக அசீம் இருப்பார் என்று முன்பே கூறிவந்த நிலையில், விக்ரமன் மற்றும் ஷிவின் முதல் மற்றும் இரண்டாவது ரன்னர் அப் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த சீசனின் டைட்டிலை விக்ரமன் வெல்லுவார் என்று கடந்த சில நாட்களாக பார்வையாளர்கள் கணித்துக் கொண்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் திடீரென அசீம் வாக்குகளைப் பெற்று கோப்பையுடன் ஐம்பது லட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும் பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Bigg Boss Tamil 6: பிக் பாஸ் இறுதி போட்டியில் டைட்டில் வின்னர் யார் என்று அறிவிக்கப்பட்டது

இறுதி வாரத்தில் அசீம் பொதுமக்களிடமிருந்து 57.54% வாக்குகளைப் பெற்றதாக உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள் தெரிவிக்கின்றன, இது விக்ரமன் 28.23% வாக்குகளை விட இரண்டு மடங்கு அதிகமாகும், அதே நேரத்தில் ஷிவின் 8.44% வாக்குகளைப் பெற்றார். விக்ரமன் ‘பிக் பாஸ் தமிழ் 6’ நிகழ்ச்சியில் ஒரு நாளைக்கு ரூ.18,000க்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் 105 நாட்கள் வீட்டில் இருந்ததால், அவருக்கு சம்பளமாக ரூ.18 லட்சம் மற்றும் இரண்டாம் இடம் கிடைக்கும். அதேபோல, ஷிவினின் சம்பளமும் ரூ.18000, அவளும் தோராயமாக அதே தொகையைப் பெறுவார் என்று கூறுகின்றனர்.

தற்போது பிக் பாஸ் வீட்டின் டைட்டில் வினராக அசீம் என்று கமல் அறிவித்துள்ளார். ஆனால் டைட்டில் வின்னர் அசீமைப் பொறுத்த வரையில் அவர் ‘பிக் பாஸ் 6’ நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய்க்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது, அதாவது அவருக்கு ரூ. 25 லட்சம் சம்பளம் மற்றும் ஐம்பது லட்சம் பரிசுத் தொகை பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version