Home Cinema TV Show Vijay tv: குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பப்படுகிறது தெரியுமா?

Vijay tv: குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பப்படுகிறது தெரியுமா?

Kukku With Comali: ரியாலிட்டி ஷோகள் நடத்தி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது டி.ஆர்.பியில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது விஜய் தொலைகாட்சி. நகைச்சுவை கலந்த குக்கு வித் கோமாலி’ ரியாலிட்டி ஷோ விஜய் டிவி வரலாற்றில் முதலிடத்தில் உள்ளது. இது மூன்று வெற்றிகரமான சீசன்களை உருவாக்கி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. பொதுவாக எந்த ஒரு ரியாலிட்டி ஷோவிற்கும் ரிப்பீட் மதிப்பு இருக்காது ஆனால் குக் வித் கோமாளியின் முந்தைய சீசன்களின் கிளிப்புகள் தொடர்ந்து பார்த்து ரசிக்கும்படியாக உள்ளது. சமயலுடன் நகைச்சுவை கலந்து ஒளிபரப்பபடுவதால் இந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெறுகிறது.

ALSO READ  Bigg Boss Tamil S6: பிக்பாஸ் தமிழ் சீசன் S6 போட்டியாளர்கள் பட்டியல் வெளியானது

தற்போது இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் எப்போது தொடங்கும் என்பதில் பெரும் ஆர்வம் இருந்து வந்த நிலையில், ஜனவரி 28, சனிக்கிழமை இரவு 9.30 மணி முதல் திரையிடப்படும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் டீசர் வெளியாகி வைரலானது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் தமிழ் 6’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சிகாக கோமாளி ரசிகர்கள் இன்னும் ஒருவாரம் மூச்சை பிடித்து காத்திருக்க வேண்டும்.

மணிமேகலை, ஜி.பி.முத்து, சிங்கப்பூர் தீபன், சுனிதா, மோனிஷா, ரவீனா மற்றும் ஓட்டேரி சிவா ஆகியோர் கோமாளிகளாக இருக்க வாய்ப்புள்ளதாக கசிந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. புகழ், பாலா, குரேஷி மற்றும் ஷிவாங்கி போன்ற முன்னாள் கோமாளிகளும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளது. நிச்சயமாக சமையல் கலைஞர்களான தாமு மற்றும் வெங்கடேஷ் பட் தொடர்ந்து நான்காவது சீசனில் தொகுப்பாளர்களாக தொடர்கின்றனர்

Leave a Reply