Home Promo Video PS 2: பொன்னியின் செல்வன் 2 படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராய் நந்தினியாக க்ளிம்ப்ஸ் வீடியோ

PS 2: பொன்னியின் செல்வன் 2 படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராய் நந்தினியாக க்ளிம்ப்ஸ் வீடியோ

122
0

PS 2: மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாக பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது மற்றும் பொன்னியின் செல்வன்: 2 ஏப்ரல் 28 அன்று வெளியாக உள்ளது. இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, பிரபு, ஆர் சரத் குமார், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, சோபிதா துலிபாலா, ஜெயராம் மற்றும் பலர் நடித்துள்ளனர், மேலும் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ALSO READ  Prince new promo teaser: சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் புதிய ப்ரோமோ டீசர் - பரபரப்பான வீடியோ

PS 2: பொன்னியின் செல்வன் 2 படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராய் நந்தினியாக க்ளிம்ப்ஸ் வீடியோ

பொன்னியின் செல்வன்: 2 படத்தின் ட்ரைலர் வெளியாவதை முன்னிட்டு படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்களை வெளியிட்டு வருகின்றனர் படத்தின் தயாரிப்பாளர்கள். பிரமாண்டமான ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா மார்ச் 29 அன்று மாலை 6 மணி முதல் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொள்வார் என்றும் லைகா புரொடக்ஷன்ஸ் அறிவித்துள்ளது. ஐஸ்வர்யா ராயின் கேரக்டர் இடம்பெறும் 30 வினாடிகள் கொண்ட புதிய பரோமோ வீடியோ வெளியிட்டனர். “அவளுடைய அழகு உங்களைக் கவரும், அவளுடைய புத்திசாலித்தனம் உங்களை வியப்பில் ஆழ்த்தும், அவளுடைய வசீகரம் உங்களைக் கொல்லக்கூடும் என்ற தலைப்புடன் வெளியிடப்பட்டது.

ALSO READ  Kadhalikka Neramillai Promo: ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இதோ

படத்தில் அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், குந்தவை மற்றும் ஊமை அரசி உள்ளிட்ட பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களுக்கான புதிய க்ளிம்ப்ஸ் டீஸர்களை தயாரிப்பாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். ட்ரெய்லர் மற்றும் கிராண்ட் ஆடியோ வெளியீட்டு விழா இன்று இரவு சென்னை ஜவர்ஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதால், பொன்னியின் செல்வன்: 2 படத்தின் இரண்டாம் பாகத்தை பார்க்க ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சியில் உள்ளனர்.

Leave a Reply