Home OTT Varisu OTT deate: விஜய்யின் வாரிசு படத்தின் OTT வெளியீடு மற்றும் தொலைக்காட்சி பிரீமியர் தேதி...

Varisu OTT deate: விஜய்யின் வாரிசு படத்தின் OTT வெளியீடு மற்றும் தொலைக்காட்சி பிரீமியர் தேதி இதுதான்

72
0

Varisu OTT: தளபதி விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது இப்படம் பாக்ஸ் ஆபிஸில் அமோக வசூல் செய்து வருகிறது. இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தனது அடுத்த படமான ‘தளபதி 67’ வேலைகளை ஏற்கனவே தொடங்கியுள்ளார்.

Also Read: அஜித் நடித்த துணிவு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் 9-வது நாள் வசூல் ரிப்போர்ட்

இப்போது, மாஸ் செய்தி என்னவென்றால், ​இந்த குடும்ப படத்தின் OTT வெளியீட்டு தேதி மற்றும் தொலைக்காட்சி பிரீமியர் தேதி இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்திய தகவல்களின்படி, வாரிசு படம் பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் மற்றும் சன் டிவியில் தமிழ் புத்தாண்டு (ஏப்ரல் 14) அன்று பிரீமியர் கட்சி திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. இப்படம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ALSO READ  CSpace: இந்தியாவின் முதல் அரசுக்கு OTT இயங்குதளம் கேரளாவில் தொடங்கப்பட்டது

Varisu OTT deate: விஜய்யின் வாரிசு படத்தின் OTT வெளியீடு மற்றும் தொலைக்காட்சி பிரீமியர் தேதி இதுதான்

வாரிசு படத்தை வம்சி பைடிப்பள்ளி எழுதி இயக்கிய இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, ஜெயசுதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன் கே. எல்லின் எடிட்டிங் மற்றும் எஸ். தமன் இசையமைத்துள்ளார்.

Leave a Reply