Naane Varuven: நடிகர் தனுஷ் தனது அண்ணனான செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். படமும் ரீலீசுக்கு தாயாராக உள்ளது.
தனுஷ் கார்த்திக் நரேனின் மாறன் படத்தை தொடர்ந்து நானே வருவேன் படத்தில் நடித்துள்ளார் தனுஷ். புதுப்பேட்டை படத்திற்கு பின் பத்து ஆண்டுகளுக்கு பிறகு செல்வராகவன், தனுஷ், யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி இந்த படத்தின் மூலம் இணைத்துள்ளது. தனுஷ் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த ‘நானே வருவேன்’ படத்தில் தனுஷ் ஸ்டைலான தோற்றத்திலும் மற்றும் நடுத்தர வயது தோற்றத்திலும் இரண்டு விதமான தோற்றத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் தனுஷ் நடித்த மூன்று படங்களும் ஓடிடியில் வெளியாகி இருந்தது. ஆனால் அந்த மூன்று படங்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக பேசப்படவில்லை. தனுஷ் தனது அண்ணனான செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்தில் நடிக்கிறார். இந்த படம் ஹிட் கொடுக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டிவருகிறார் தனுஷ். ரசிகர்களும் இந்த படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
இந்த நிலையில் தனுஷ் மற்றும் அண்ணன் செல்வராகவன் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது என்று தகவல் தெரிவிக்கின்றனர். ‘நானே வருவேன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது. இந்த படத்தை பார்த்த தனுஷ் படம் எதிர்பார்த்தது போல் வரவில்லை என்று தனுஷ் தனது அண்ணனிடம் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. எடிட்டிங் வரை இந்த வாகுவாதம் நடந்ததாக தெரிவிக்கின்றன.
மோதல் அதிகமாகி ஒருகட்டத்தில் இனிமேல் நான் உன் படத்தில் பணியாற்ற மாட்டேன் என்று செல்வராகவன் கூறிவிட்டார். தனுஷும் உன் இயக்கத்தில் இனி நடிக்க போவதில்லை என்றும் சண்டை போட்டுகொண்டுதாக கூறப்படுகிறது. ஆனால் படத்தை பார்த்த சிலர் படம் சிறப்பாக வந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.