Home GOSSIP Vijay: உதயநிதி மீது வருத்தம் கொண்ட விஜய் ரசிகர்கள் – ஏன் தெரியுமா?

Vijay: உதயநிதி மீது வருத்தம் கொண்ட விஜய் ரசிகர்கள் – ஏன் தெரியுமா?

0

Vijay: தளபதி விஜய் படம் எப்படி இருந்தா என்ன தளபதியை நாம் திரையில பாத்துட்டா போதும் என்ற ஆவலும் தளபதியின் படம் வெளியாவதற்கு முன்பே அவரது அடுத்த படத்தின் அப்டேட் எப்போது என்று எதிர்நோக்கி காத்துகிடக்கின்றனர் ரசிகர்கள்.

இந்த நிலையில் நடிகரும், சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் ரெட்ஜெயன்ட் என்னும் சினிமா தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனத்தை நடத்திவரும் உதயநிதி மீது விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். இதற்கு முன்பு பட தயாரிப்பு பணிகளில் ஈடுபட்ட ரெட்ஜெயன்ட் நிறுவனம் தற்போது விநியோகிப்பதில் ஈடுபட்டு வருகிறது. அதோடு இந்த ரெட்ஜெயன்ட் நிறுவனம் இந்தாண்டு பெரும்பாலான படங்களை வெளியிட்டதில் சினிமா ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து ரெட்ஜெயன்ட் வெற்றிக்கு பின்னால் இருப்பவர்கள் என்று ஒரு பதிவை வெளியிட்டது.

Vijay: உதயநிதி மீது வருத்தம் கொண்ட விஜய் ரசிகர்கள் - ஏன் தெரியுமா?

அந்த பதிவில் ரெட்ஜெயன்ட் மூவீஸ் நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். ரெட்ஜெயன்ட் மூவீஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இவர்கள் தான் எஃப் ஐ ஆர்., காத்துவாக்குல ரெண்டுகாதல், டான், நெஞ்சுக்கு நீதி மற்றும் விக்ரம் போன்ற படங்களின் வெற்றிக்கு பின்னால் இருந்து உழைத்தவர்கள் என்று டிவிட்டரில் பதிவிட்டிருந்தனர். இந்தநிலையில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரெட்ஜெயன்ட் வெளியிட்ட நிலையில் இந்த பதிவில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தை தேடி பார்த்தனர். ஒரு பெரிய நடிகரின் படம் இடம்பெறாத நிலையில் விஜய் ரசிகர்கள் மிகுந்த வருத்தம் கொண்டுள்ளனர். உண்மையாகவே பீஸ்ட் வெற்றிப்படமாக அமையவில்லையா? என்று ஏற்றுகொள்ளாத மன நிலைமையில் உள்ளனர் ரசிகர்கள்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் பூஜா ஹெக்டே நடித்த படம் பீஸ்ட் கேஜிஎப்-2 படத்துடன் மோதிய பீஸ்ட் பலவீனமான திரைக்கதையின் காரணமாக நெகடிவ் விமர்சனங்களை பெற்றது. பெரிய நடிகர் படம் என்றதால் வசூலை அள்ளியது என்று பேசபட்ட நிலையில் ரெட்ஜெயன்ட்யின் இப்படி ஒரு பதிவு எதிர்பாராத விதமாக அமைந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உதயநிதி மீது வருத்தம் கொண்டுள்ளனர்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version