பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சுஷ்மிதா சென். இவர் 1994ஆம் ஆண்டு ”மிஸ் யுனிவர்ஸ்” பட்டம் பெற்றவர். இவர் தமிழ் சினிமாவில் “ரட்சகன்” படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதை அடுத்து ஷங்கரின் ‘முதல்வன்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார். இவர் தற்போது நாகர்ஜூனாவின் “ரக்ஷகாடு” என்ற தெலுங்கு படத்தில் ஒரு குத்து பாட்டுக்கு நடனம் ஆடியிருக்கிறார்.
40 வயதாகும் சுஷ்மிதா சென், தற்போது தன்னை விட 14 வயது குறைந்த ரோஹ்மன் ஷாவால் என்ற இளைஞரோடு லிவிங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். தற்போது அவரை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார். இவர்களது திருமணம் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருப்பதாக, பாலிவுட்டி வட்டாரத்தில் செய்தி பரவி வருகிறது.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும், தன்னை விட வயதில் மிகவும் குறைந்தவரான ஹாலிவுட் பாடகர் நிக் ஜோன்ஸை திருமணம் முடித்தார். பிரபலங்கள் தன்னைவிட வயது குறைந்த ஆண்களை திருமணம் செய்வது ஒன்றும் புதிதல்ல.