Home First single Devil first look: பிரபல இயக்குனர் இசையமைக்கும் டெவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது

Devil first look: பிரபல இயக்குனர் இசையமைக்கும் டெவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது

0

Devil: இயக்குனர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பிஸியாக இருக்கும் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மிஷ்கின் தற்போது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். அவர் தனது வாழ்க்கையில் முதன்முறையாக இசை அமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார்.

Also Read: அமெரிக்காவில் அஜித்தின் துணிவு வெளியீட்டு தேதி அறிவிப்பு 

Devil first look: பிரபல இயக்குனர் இசையமைக்கும் டெவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது

‘டெவில்’ படத்தை மிஷ்கினின் சகோதரர் ஆதித்யா இயக்குகிறார். தற்போது பூர்ணா முக்கிய வேடத்தில் நடித்துள்ள டெவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது, மேலும் இந்த படத்திற்கு மிஷ்கின் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப் வேலைகள் நடைபெற்று வருகின்றன.

ஆதித்யா இயக்கும் இந்தப் படத்தில் விதார்த், ஆதித் அருண், சுபாஸ்ரீ ராயகுரு ஆகியோரும் நடித்துள்ளனர். மாருதி பிலிம்ஸ் மற்றும் டச்ஸ்கிரீன் என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் எஸ் ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ் ஹரி இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தை அடுத்த ஆண்டு 2023 மார்ச் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கிறார்கார்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version