Home First single Prince 1st Single: ‘பிரின்ஸ்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் பிம்பிலிக்கா-பில்லாப்பி வெளியாகியுள்ளது

Prince 1st Single: ‘பிரின்ஸ்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் பிம்பிலிக்கா-பில்லாப்பி வெளியாகியுள்ளது

0

Prince 1st Single: அனுதீப் (‘ஜாதி ரத்னாலு’ புகழ்) இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பிரின்ஸ்’ படத்தில் நடிக்கிறார். இந்த படம் தமிழ்-தெலுங்கு இரு மொழிகளில் உருவாகியுள்ளது. ‘பிரின்ஸ்’ தீபாவளி அன்று உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் உக்ரேனிய நடிகை மரியா ரியாபோஷாப்கா கதாநாயகியாக நடிக்கிறார்.

Also Read: வெற்றிமாறனுடன் அடுத்த இரண்டு பாகத்தில் இணைகிறார் உதயநிதி ஸ்டாலின்

தற்போது புதிய செய்தி என்னவென்றால் பிரின்ஸ்’ முதல் சிங்கிள் செப்டம்பர் 1 (இன்று) ஆம் தேதி வெளியிடப்படும்என்று ஏற்கனவே நாங்கள் அறிவித்தபடி இன்று ஃபர்ஸ்ட் சிங்கிள் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பிரபல இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘பிரின்ஸ்’ படத்தில் முதல் முறையாக தெலுங்கில் சொந்தக் குரலில் டப்பிங் செபினார் சிவகார்த்திகேயன். நவீன் பாலிஷெட்டி, பிரேம்ஜி அமரன், சத்யராஜ் ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

Prince 1st Single: 'பிரின்ஸ்' ஃபர்ஸ்ட் சிங்கிள் பிம்பிலிக்கா-பில்லாப்பி வெளியாகியுள்ளது

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஆசிரியராக நடிக்கிறார். பாண்டிச்சேரி, தமிழ்நாடு மற்றும் ஹைதராபாத் முழுவதும் படமாக்கப்பட்டுள்ளது. ‘பிரின்ஸ்’ படத்தை சுரேஷ் புரொடக்ஷன்ஸ், சாந்தி டாக்கீஸ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கே.எல் படத்தொகுப்பைக் கவனிக்கிறார்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version