Home Entertainment Vikram: இன்று இரவு ஓடிடி தளத்தில் விக்ரம் படம் – பார்க்க மூன்று ப்ளான்கள்

Vikram: இன்று இரவு ஓடிடி தளத்தில் விக்ரம் படம் – பார்க்க மூன்று ப்ளான்கள்

0

Vikram: விக்ரம் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் பார்க்க மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தா ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ். தற்போது விக்ரம் திரைப்படம், இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12 மணிக்கு ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. விக்ரம் படத்தை பார்க்க செய்ய வேண்டியது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உலகம் முழுவதும் விக்ரம் வசூல்:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த மாதம் 3ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம், உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. விக்ரம் படம் வெளியாகி ஒரு மாதம் காலம் கடந்த நிலையிலும், இன்னும் பல்வேறு திரையரங்குகளில் விக்ரம் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
விக்ரம் திரைப்படம் இன்றைய நிலவரப்படி உலகம் முழுவதும் ரூ. 442 கோடியை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் விக்ரம் படத்தை மிகப் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது.

Vikram: இன்று இரவு ஓடிடி தளத்தில் விக்ரம் படம் - பார்க்க மூன்று ப்ளான்கள்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சுமார் 120 கோடி ரூபாய் கொடுத்து விக்ரம் படத்தை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ஜூலை 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இன்று நள்ளிரவு 12 மணிக்கு படம் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓடிடி தளத்தில் விக்ரம் படம்:

நீங்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில், விக்ரம் படத்தை பார்க்க வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் முதலில் சப்ஸ்கிரிப்ஷன் செய்திருக்க வேண்டும். தற்போது மூன்று வகை ப்ளான்களை ஹாட்ஸ்டார் தளம் தெரிவித்தது. அதன்படி ரூ. 499 ப்ளானில், மொபைல் போன் ஓடிடி தள ‘ஆப்’ மூலம் மட்டும் விக்ரம் படத்தை காணலாம். ஸ்டாண்டர்டு HD தரத்தில் மற்ற படங்கள், வெப் சீரிஸ், நாடகங்கள் உள்ளிட்டவைகளை பார்க்கலாம். இந்த பிளான் ஒரு ஃபோன்க்கு மட்டும்தான் அனுமதி இதில் விளம்பரங்கள் தோன்றும்.

இரண்டாவது ரூ. 899 ப்ளான். இந்த ப்ளானிள் முழு HD தரத்தில் 2 டிவைஸ்கள் வரை பயன்படுத்தி கண்டு மகிழலாம். ரூபாய் 1,499 ப்ளானில் 4K தரத்தில் விளம்பரங்கள் இல்லாத சேவையை பெறலாம். இந்த பிளான்கள் அனைத்தும் ஓராண்டிற்கு உரியவை.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version