Home Entertainment Valimai: அஜித்தை கடுமையாக விமர்சித்த தயாரிப்பாளர்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்

Valimai: அஜித்தை கடுமையாக விமர்சித்த தயாரிப்பாளர்.. கொந்தளிக்கும் ரசிகர்கள்

0

Ajith: வலிமை படத்தின் மேக்கிங் வீடியோவில், அஜித் பைக்கில் இருந்து கீழே விழுந்து உடனே எழுந்து மறுபடியும் பைக் சேஸிங் செய்வதும் போன்ற துணிச்சல் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. 

Ajith

அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள், மோஷன் போஸ்டர், கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. வலிமை படத்தில் அஜித்குமாக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூர் தயாரிப்பில் ஓராண்டிற்கு மேலாக தயாரிப்பில் இருக்கும் இந்த படத்திற்காக அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.  

‘வலிமை’ படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது  வெளியாகி சோஷல் மீடியாவில் வைரலானது. அந்த வீடியோவில் அஜித் பைக்கில் இருந்து கீழே விழுந்த பின் உடனே எழுந்து மறுபடியும் பைக் சேஸிங் செய்வதும் போன்ற துணிச்சல் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த வீடியோவை பார்ப்பவர்கள் நெஞ்சை பதை பதைக்கும் வகையில் மிக மிரட்டலாக இருந்தது. இந்த மேக்கிங் வீடியோ பார்த்த பிறகு ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது.

ஆன்டி இண்டியன் பட தயாரிப்பாளர் ஆதம் பாவா தனது ட்விட்டரில் இந்த மேக்கிங் வீடியோ பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த வீடியோவில் வரும் காட்சிகள் போன்ற செயல் உங்கள் ரசிகர்களையும் செய்யத்தூண்டும். அஜீத் அவர்களே. இது போல் சென்னை மாநகரில் பைக் ஓட்டியவர்கள் மட்டுமல்லாமல், எதிரே வருபவர்களையும் பலியாகிய பல சம்பவங்கள் பாதிருக்கிறோம். வாகனத்தின் பெயர் இரு சக்கர வாகனம். அதை ஒரு சக்கரத்தில் ஓட்டினால் நியாயமாரே? என டிவிட்டர் பக்கதில் பதிவிட்டுள்ளார்.

தயாரிப்பாளர் ஆதம் பாவாவின் கடுமையான இந்த ட்வீட் பதிவை அஜித் ரசிகர்களுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. வலிமை படத்தில் யோகி பாபு, ஹியூமா குரோஷி, குக்வித் கோமாளி புகழ், மற்றும் கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் வெளியாக உள்ளதாக வலிமை படக்குழு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version