Trisha: நடிகை திரிஷா தன் திரையுலக பயணத்தை 19 வருடங்கள் நிறைவு செய்ததுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வரும் நடிகை திரிஷா. 1999ஆம் ஆண்டு மிஸ் சென்னையாக தேர்வு செய்யப்பட்ட பின்புதான் தன் திரையுலக பயணத்தை தொடங்கினார் திரிஷா, அதன் பிறகு பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக, அதன்பின்னர் சூர்யாவின் மௌனம் பேசியதே படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
பிறகு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என தமிழ் மாறும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக நடித்துள்ளார் திரிஷா. இவர் நடித்த பரமபத விளையாட்டு படம் கடைசியாக நடித்து ஓடிடியில் வெளியான படம். தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசமாக கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்கள் இருப்பது குறிபிடதக்கது.
தற்போது திரிஷா தன் திரையுலக பயணத்தை தொடனகி 19 வருடங்கள் ஆகியுள்ளதை படப்பிடிப்பின் போது கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சோஷல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இது குறித்து திரிஷா தனது சமூக வலைத்தள பக்கத்தில், ஒரு முறை ஞானி என்னிடம் கூறினார், “விடுமுறை தேவையில்லாத வேலையைப் பெறுங்கள்” அதனால் நான் இந்த வேலையை செய்தேன். நான் இன்னும் விடுமுறையில் இருக்கிறேன்.
இந்தப் பயணத்தில் என்னுடன் இருந்தவர்களை, நான் ஒருபோதும் கை விடவில்லை, உங்கள் அனைவராலும் நான் இந்த இடத்தில் இருக்கிறேன், இன்று இருக்கிறேன். என்னுடைய வாழ்வின் மிக சிறந்த 19 வருடங்களுக்கு நன்றி என்று திரிஷா பதிவிட்டுள்ளார்.