Home Entertainment Suriya: ஆஸ்கர் விருது தேர்வுக் குழுவில் முதல் தென்னிந்திய உறுப்பினர் சூர்யா

Suriya: ஆஸ்கர் விருது தேர்வுக் குழுவில் முதல் தென்னிந்திய உறுப்பினர் சூர்யா

0

Suriya: உலக சினிமாவில் உயரிய மதிப்புமிக்க விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது தான். இந்த விருதுகளை கொடுக்கும் தேர்வு குழுவில் உலகம் முழுவதும் உள்ள 4000 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

ஆஸ்கர் விருதுகான படங்களை தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினர்களாக இருக்கும் இவர்கள் தங்களுக்கு பிடித்த படங்களை தேர்வு செய்ய முடியும். இந்த சிறப்புக்குரிய ஆஸ்கர் விருது தேர்வுகுழுவில் கோலிவுட் நடிகரான சூரியா இந்த குழுவில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்வு குழுவில் இணைய அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த ஆஸ்கர் விருது குழுவில் தென்னிந்தியாவை சேர்ந்த எந்த நடிகரும் இல்லை.

அண்மையில் சூர்யா நடித்து தயாரித்த ஜெய்பீம் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு கொண்டுசெல்லபட்டது. ஆனால் பரிந்துரை செய்யப்படாததால் விருது கைநழுவி போனது இந்த சூழலில் ஆஸ்கர் விருதைப் கைவிட்ட சூர்யா, ஆஸ்கர் விருது தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராகி தற்போது அனைவரையும் திரும்பி பார்கவைத்துள்ளர் சூர்யா. ஆஸ்கர் விருது தேர்வு குழுவில் உறுப்பினராக இருக்கு நடிகர் சூர்யாவுக்கு பலரும் தங்களது பரட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தங்களது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Suriya: ஆஸ்கர் விருது தேர்வுக் குழுவில் முதல் தென்னிந்திய உறுப்பினர் சூர்யா

கமல்ஹாசன்:

அருமை தம்பி சூர்யா, உங்களை நினைத்து பெருமைக்கொள்கிறேன் என்று நடிகர் கமல்ஹாஸன் தனது டிவிட்டர் பக்கத்தில் சூர்யாவுக்கு பாராட்டை தெரிவித்துள்ளார். இதனையடுத்து முதல்வர் முக ஸ்டாலின், தனது தேர்ந்த நடிபாற்றலுகும் சமூக அக்கறை கொண்ட கதை தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, ஆஸ்கர் விருது தேர்வுகுழுவில் அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலக பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யாவுக்கு பாராட்டுகள் வானமே எல்லை” என்று வழ்து தெரிவித்திருந்தார்.

சூர்யாவின் பதில்:

முதல்வரின் வாழ்த்துக்கு சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் தாங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிப்பதோடு பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது. நல்ல படைப்புகளை தொடர்ந்து தர முயற்சிக்கிறேன் தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள் என பதிலளித்துள்ளார். மேலும் நடிகர் கமலுக்கும் நன்றி தெரிவித்துள்ளார் சூர்யா.

 

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version