Home Cinema Entertainment Anant Ambani Pre-Wedding: முகேஷ் அம்பானி மகனின் ப்ரீ வெட்டிங் விழாவில் குடும்பத்துடன் சூப்பர் ஸ்டார்...

Anant Ambani Pre-Wedding: முகேஷ் அம்பானி மகனின் ப்ரீ வெட்டிங் விழாவில் குடும்பத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

Anant Ambani Pre-Wedding: இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர் முகேஷ் அம்பானி தனது மகன் ஆனந்த் அம்பானிக்கு குஜராத் மாநிலம் ஜாம்நகரில் ஆடம்பரமான திருமண விழாவை ஏற்பாடு செய்தார். வணிக அதிபரான வீரேன் ஏ. மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டை ஆனந்த் அம்பானி ப்ரீ வெட்டிங் விழா நடந்தது. இதுவே நாட்டின் மிகப்பெரிய ப்ரீ வெட்டிங் விழாவாக இருக்கலாம்.

Anant Ambani Pre-Wedding: முகேஷ் அம்பானி மகனின் ப்ரீ வெட்டிங் விழாவில் குடும்பத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, பிராவோ, ரஷீத் கான், பாலிவுட் பிரபலங்கள் ஷாருக்கான், தீபிகா படுகோன், ரன்வீர் சிங், தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா உள்ளிட்டோர் மார்ச் 1 முதல் 3 வரை நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும், இந்த திருமண விழாவில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் மகள் இவாங்கா, மெட்டா சிஇஓ (CEO) மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளிட்ட உலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்திய திரையுலகின் மிகப்பெரிய அடையாளங்களில் ஒருவரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இப்போது தனது மனைவி மற்றும் மகளுடன் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் விழாவில் பங்கேற்றுள்ளார். தலைவரும் அவரது குடும்பத்தினரும் உள்ள படங்கள் மற்றும் வீடியோக்கள் நேற்று முதல் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ப்ரீ வெட்டிங் விழாவில் இன்று அவரும் அவரது குடும்பத்தினரும் பாரம்பரிய உடை அணிந்திருந்தனர்.

Leave a Reply