Home Entertainment Simbu Birthday Treat: ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட் தருகிறார் சிம்பு

Simbu Birthday Treat: ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட் தருகிறார் சிம்பு

88
0

Simbu Birthday Treat: பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி சிம்புவின் பிறந்தால் என்பதால் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான ட்ரீட் குடுக்க போவதாக சமூக வலைதளங்களில் தகவல் தெரிவிக்கின்றனர்.

Simbu Birthday Treat: ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட் தருகிறார் சிம்பு
தனது 39 ஆவது பிறந்தநாளை கொண்டாடவுள்ள சிம்பு தனது ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான ட்ரீட் தரவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சிம்பு தற்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். அதன் படபிடிப்பு கூடியவிரைவில் நிறைவு பெறும் நிலையில் இருக்கிறது. அத்தோடு பத்து தல கொரோனா குமார் என்ற படத்திலும் நடிக்கிறார்.

ALSO READ  Anant Ambani Pre-Wedding: முகேஷ் அம்பானி மகனின் ப்ரீ வெட்டிங் விழாவில் குடும்பத்துடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சிறு வயதில் தனது அப்பாவான டி.ஆர் ராஜேந்திரன் இயக்கத்தில் மட்டுமல்லாது அவருடன் இணைந்து நடித்து தற்போது லிட்டில் சூப்பர்ஸ்டார் என்று கொடிகட்டி பரந்த சிம்பு தனது உடல் எடை அதிகமானதால் அவருடைய மார்கெட்டை தக்கவைத்து கொள்ளாமல் போனது.
அதன் பின் ஈஸ்வரன் படத்திற்காக 20 கிலோவரை உடல் எடையை குறைத்து அனைவரின் கவனத்தை ஈர்த்தார் சிம்பு. பின்பு மாநாடு படத்திற்கு பிறகு ஒரு மிகப்பெரிய கம்பேக் கொடுத்து அசத்தியுள்ள நிலையில் தொடர்ந்து பெரிய படங்களில் கமிட்டாகி வருகிறார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

ALSO READ  PS 1: பூசன் சர்வதேச திரைப்பட விழாவில் பொன்னியின் செல்வன் - பரிந்துரைக்கப்பட்ட பிரிவுகள்

பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி சிம்புவின் பிறந்தால் என்பதால் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான ட்ரீட் குடுக்க போவதாக சமூக வலைதளங்களில் தகவல் தெரிவிக்கின்றனர்.
தான் என்ன செய்து 20 கிலோ வரை எடை குறைத்தார் என்பது பற்றி வீடியோ வெளியிடுவதாக சிம்பு தெரிவித்த நிலையில் ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக அந்த வீடியோக்கள் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்த வீடியோ அவரது ரசிகர்களுக்கு ஒரு சிறந்த இன்ஸ்பிரேஷனாக இருக்கும் என்று சொல்லலாம்.

Leave a Reply