Home Entertainment Simbu: அந்தமாறி செஞ்சேன் ஒரு வயசுல – இனி அதற்கு இடமே இல்லை: சிம்பு

Simbu: அந்தமாறி செஞ்சேன் ஒரு வயசுல – இனி அதற்கு இடமே இல்லை: சிம்பு

63
0

Simbu: அந்தமாறி செஞ்சேன் ஒரு வயசுல, இனி அதற்கு இடமே இல்லை என்று சிம்பு தெரிவித்தார்.

Simbu

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில்  மாநாடு படம் நவம்பர் 25ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சிம்பு ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் அனைவருக்கும் படம் பிடித்திருக்கிறது. ரசிகர்களும், திரையுலகினரும், படத்தை சமூக வலைதளங்களில் பாராட்டி வருகிறார்கள். இயக்குநர் ஷங்கர் கூட மாநாடு படத்தை பார்த்து இம்பிரஸாகி ட்விட்டரில் கருத்து தெரிவித்தார்.

ALSO READ  Sardar Jukebox: கார்த்தியின் சர்தார் படத்தில் இருந்து முழு ஜூக்பாக்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது

வெங்கட் பிரபு மாநாடு படம் ஹிட்டானதும் பார்ட்டி கொடுத்திருப்பாரே, ஜமாய்ச்சீங்களா என சிம்புவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவரோ இனி நான் பார்ட்டிகளில் கலந்து கொள்ளவே மாட்டேன். பார்ட்டிகளுக்கு சென்று மது அருந்தியது எல்லாம் ஒரு வயசு. இனிமேல் பார்ட்டிகளுக்கு செல்ல மாட்டேன் என்று சிம்பு தெரிவித்தார்.

Simbu

சிம்பு பார்க்க அங்கிள் மாதிரி இருக்கிறார், சிம்புவின் கெரியர் காலி என்று பலரும் பேசிய நேரத்தில். மாநாடு படத்திற்காக சிம்பு தன் உடல் எடையை வெகுவாக குறைத்து வியக்க வைத்தார். தற்போது சிம்பு சைவத்திற்கு மாறிவிட்டார். மேலும் மது அருந்துவதையும் நிறுத்திவிட்டார். இந்நிலையில் தான் பார்ட்டிகளுக்கு இனி கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

Leave a Reply