Home Entertainment Rajinikanth: தலைவர் வீட்டின் முன் காத்திருந்த ரசிகர்கள்: ரசிகர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார்

Rajinikanth: தலைவர் வீட்டின் முன் காத்திருந்த ரசிகர்கள்: ரசிகர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார்

0

Rajinikanth: இன்று அதிகாலை ரஜினிகாந்த் வீட்டின் முன் ரசிகர்கள் குவிந்து, ரஜினிக்கு புத்தாண்டு வாழ்த்து கூற காத்திருந்தனர் ரசிகர்கள்.

rajinikanth

சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சில தினங்களுக்கு முன் வெளியான படம்தான் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப்படத்தில் நயன்தாரா ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர்களுடன் சூரி, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சதீஷ், மற்றும் ஜகபதி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். 2021 தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று நல்ல வசூல் தந்தது அண்ணாத்த. அண்ணாத்த படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனையை படைத்தது. ரஜினிகாந்த் வசூல் சாதனை படங்கள் பட்டியலில் சேர்ந்தது. அதனை தொடர்ந்து ரஜினிகாந்த், இயக்குனர் சிவா வீட்டிற்கே சென்று சர்ப்ரைஸ் விசிட் கொடுத்து தங்க செயின் ஒன்று பரிசாக கொடுத்தார் ரஜினிகாந்த். பிறகு 3 மணிநேரம்  சிவாவுடன் கலந்துரையாடிவிட்டு ரஜினிகாந்த் வீடு திரும்பினார்.

தீபாவளி, பொங்கல், புத்தாண்டு  உள்ளிட்ட விசேஷ நாட்களிலும் மற்றும் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளிலும் ரசிகர்கள் ரஜினிகாந்த் வீட்டுக்கே சென்று வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். இந்நிலையில் இன்று புத்தாண்டை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த்.

இன்று அதிகாலை ரஜினிகாந்த் வீட்டின் முன் ரசிகர்கள் குவிந்து, ரஜினிக்கு புத்தாண்டு வாழ்த்து கூற காத்திருந்தனர் ரசிகர்கள். ரஜினிகாந்த் தனது வீட்டின் வாசலில் தன்னை பார்க்க வந்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் நேரில் சந்தித்து தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் சோஷல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version