Home Cinema Entertainment Tollywood: நயன்தாராவுக்கு பிரதீப் ரங்கநாதனின் சிறப்புப் பரிசு – உற்சாகத்தில் ரசிகர்கள்

Tollywood: நயன்தாராவுக்கு பிரதீப் ரங்கநாதனின் சிறப்புப் பரிசு – உற்சாகத்தில் ரசிகர்கள்

Tollywood: தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா சமீப காலங்களில் திரைப்பட தயாரிப்பாளராகவும், தொழிலதிபராகவும் தனது எல்லையை விரிவுபடுத்தியுள்ளார். தற்போது அட்லீ இயக்கிய ‘ஜவான்’ படத்தில் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஜோடியாக பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார்.

Tollywood: நயன்தாராவுக்கு பிரதீப் ரங்கநாதனின் சிறப்புப் பரிசு - உற்சாகத்தில் ரசிகர்கள்

இந்நிலையில், நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் தங்களது முதல் திருமண நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடினர். அவர்கள் ஏழு மாத இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களும், விக்னேஷ் சிவன் தனது மனைவிக்கு பரிசு அளிக்கும் வீடியோவும் வைரலாகி வருகிறது. ‘கோமாலி’ மற்றும் ‘லவ் டுடே’ புகழ் நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் தம்பதிக்கு ஒரு சிறப்புப் பரிசை அனுப்பினார், அதில் “நான் பார்த்த இனிமையான மற்றும் மிகவும் அன்பான ஜோடிகளில் ஒன்று என்று வாழ்த்துக்களை தெரிவித்தார்.

ALSO READ  Ajith: அஜீத் சொன்னது கேட்டு அதிர்ந்து போன ரசிகர்கள்

Tollywood: நயன்தாராவுக்கு பிரதீப் ரங்கநாதனின் சிறப்புப் பரிசு - உற்சாகத்தில் ரசிகர்கள்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளதாக ஏற்கனவே செய்திகள் படித்தோம். இந்தப் படம் கமல்ஹாசனின் RKFI மூலம் தயாரிக்கப்படுவதாகவும், இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply