Multiplex offer: ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பம் அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு ஒரு படத்திற்கு மேல் பக்க முடியாத அளவுக்கு சினிமா டிக்கெட் கட்டணம் இப்போது அதிகமாக உள்ளது. நுகர்வோர் விலை குறைய வேண்டும் என்று விரும்பினாலும், மல்டிபிளக்ஸ் மற்றும் சிங்கிள் தியேட்டர் உரிமையாளர்கள் கட்டணத்தை மேலும் உயர்த்துமாறு அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
Also Read: வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியாகியுள்ளது
இதற்கிடையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 16 ஆம் தேதி உலக சினிமா தினமாக அனுசரிக்கப்படுகிறது, இந்த ஆண்டு அகில இந்திய மல்டிபிளக்ஸ் சங்கம் திரைப்பட பார்வையாளர்களுக்கு ஒரு ஆச்சரியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமையன்று வரும் அந்த நாளில், நாள் முழுவதும் டிக்கெட் விலை ரூ. 75/-.மட்டும்தான் என்று அறிவித்தது.
குடும்பம் அல்லது நண்பர்களுடன் தங்களுக்குப் பிடித்த திரைப்படத்தைப் பார்க்கத் திட்டமிடுபவர்கள். நீங்கள் குறைந்தபட்சம் ஐம்பது சதவிகிதம் மற்றும் அதற்கு மேல் சேமிப்பீர்கள். தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘வெந்து தானிந்தது காடு’ திரைப்படம் வரும் 15ஆம் தேதி வெளியாகிறது என்பதால் செப்டம்பர் 16 இந்த சலுகை பயன்படுத்துவார்கள் என்று தெறிகிறது.