Home Entertainment Keerthy Suresh marriage: கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்ய வலுவான முடிவை எடுத்திருக்கிறாரா?

Keerthy Suresh marriage: கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்ய வலுவான முடிவை எடுத்திருக்கிறாரா?

145
0

Keerthy Suresh: இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பன்மொழி நடிகையான கீர்த்தி சுரேஷ், முன்னாள் கதாநாயகி மேனகா மற்றும் மலையாள தயாரிப்பாளர் சுரேஷின் மகள் ஆவார். மிக இளம் வயதிலேயே ‘நடிகையர் திலகம்’ படத்துக்காக தேசிய விருது பெற்றார். தற்போது அவர் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் பிஸியாக உள்ளார். கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து அவ்வப்போது வதந்திகள் பரவி வருகிறது. இவருக்கும் கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவருக்கும் நடப்பு உள்ளதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தகவல் வெளியானது. 30 வயதான கீர்த்தி சுரேஷ் அதை மறுத்துள்ளார், இப்போது மீண்டும் அவர் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ALSO READ  Gautham Karthik: கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் போட்டோ ஷூட் - வைரலாகும் புகைப்படங்கள்

Also Read: லவ் டுடே வெற்றிக்கு பிறகு டோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்

மேனகாவும் சுரேஷும் ஏற்கனவே தகுந்த மாப்பிள்ளை வேட்டையை ஆரம்பித்து விட்டதாகவும், கீர்த்தியும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. திருநெல்வேலிக்கு அருகில் உள்ள மூதாதையர் வீட்டிற்கும், அங்குள்ள குலதெய்வ கோவிலுக்கும் திருமணத்தை மங்கலமாக தொடங்குவதற்காக குடும்பத்தினர் சமீபத்தில் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னணி நடிகை தனது நடிப்பு வாழ்க்கையை மெதுவாக நிறுத்திவிட்டு திரைப்படத் தயாரிப்பில் கவனம் செலுத்துவார் என்று தெரிகிறது. இந்த செய்தி குறித்து கீர்த்தி சுரேஷ் தரப்பில் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

ALSO READ  Gautham karthik marriage: திருமணத்திற்கு பின் முதல் புகைப்படத்தை பகிர்ந்த கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன்

Keerthy Suresh marriage: கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்ய வலுவான முடிவை எடுத்திருக்கிறாரா?

கீர்த்தியின் வரவிருக்கும் படங்களில் ‘மாமன்னன்’, ‘தசரா’ மற்றும் ‘சைரன்’ ஆகியவை அடங்கும். அவர் அடுத்ததாக ஹோம்பலே பிலிம்ஸ் மற்றும் சுதா கொங்கரா தயாரிக்கும் பான் இந்திய படத்தில் நடிக்கவுள்ளார், அதில் எம்.எஸ். பாஸ்கர் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.

Leave a Reply