Katrina Kaif: பாலிவுட் நடிகர் விக்கி கௌஷலுக்கும் நடிகை கத்ரீனா கைஃபுக்கும், ஜெய்பூரில் திருமணம் நடைபெற்றது. பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்.
பிரபல ஹிந்தி நடிகை கத்ரீனா கைஃபும், நடிகர் விக்கி கௌஷலும் கடந்த 2019ம் ஆண்டில் இருந்து காதலித்து வந்தனர். இந்நிலையில் இன்று அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் இருக்கும் Six Senses Fort Barwara ரிசார்ட்டில் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்தில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். கத்ரீனாவின் திருமணத்திற்கு Six Senses Fort Barwara ரிசார்ட் வாடகை எதுவும் வாங்காமல் இலவசமாக இடத்தை கொடுத்துள்ளார். ஆனால் கத்ரீனா கைஃபும், விக்கியும் தங்கியிருக்கும் அறையின் ஒரு நாள் வாடகை மட்டும் ரூ. 7 லட்சம் ஆகும். இவர்களின் திருமணம் மூலம் தங்களுக்கு இலவச விளம்பரம் மாற்று வியாபாரம் சூடுபிடிக்கும் என்று ரிசார்ட் உரிமையாளர் நினைக்கிறார்களாம்.
மேலும் கத்ரீனா கைஃபும், விக்கியின் திருமண வீடியோ உரிமையை அமேசான் பிரைம் வீடியோவுக்கு ரூ. 80 கோடிக்கு கொடுக்கபட்டுள்ளது என்று தகவல்.