Home Entertainment Sowndarya Rajinikanth: உங்களால எங்க தலைவருக்கு எவ்வளவு கஷ்டம் என திட்ட ஆரம்பித்த ரஜினி ரசிகர்கள்

Sowndarya Rajinikanth: உங்களால எங்க தலைவருக்கு எவ்வளவு கஷ்டம் என திட்ட ஆரம்பித்த ரஜினி ரசிகர்கள்

0

Sowndarya Rajinikanth: ஐஸ்வர்யாவின் விவாகரத்து அறிவிப்பை தொடர்ந்து தங்கை சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்த புரோபைல் போட்டோ மாற்றிவிட்டார்.

Sowndarya Rajinikanth: உங்களால எங்க தலைவருக்கு எவ்வளவு கஷ்டம் என திட்ட ஆரம்பித்த ரஜினி ரசிகர்கள்

கோலிவுட்டில் தற்போது பொது ஜனங்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவும் செய்தி தனுஷ், ஐஸ்வர்யாவின் திடீர் விவாகரத்து அறிவிப்பு தான். இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் தனுஷுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

தற்போது இவர்கள் இருவரும் பிரிய உள்ளதாக நேற்று இரவு தனித்தனியாக அறிவித்தார்கள். இந்த செய்தி தீயாக பரவி ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சியில் உள்ளது. இது தொடர்பாக தனுஷ், ஐஸ்வர்யா தங்கள் சோஷல் மீடியா பக்கதில் தனித்தனியாக அறிவித்தார்கள். அந்த அறிக்கையில் 18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஒரு கட்டத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்கள் இருவரும் எங்களை சிறப்பாக புரிந்து கொள்ள மேலும் நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்’ என்று தெரிவித்திருந்தனர்.

தற்போது ஐஸ்வர்யாவின் விவாகரத்து அறிவிப்பை தொடர்ந்து தங்கை சௌந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்த புரோபைல் போட்டோ மாற்றிவிட்டார். இதற்க்கு முன்பு சௌந்தர்யா ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் உள்ளிட்ட மொத்த குடும்பமும் உள்ள புகைப்படத்தை வைத்திருந்தர், தற்போது தந்தையுடன் அக்கா, தங்கை இருவரும் சிறுவயது புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் மாற்றியுள்ளார்.

தற்போது ரஜினி ரசிகற்க புரோபைல் போட்டோவை மாற்றியது ஐஸ்வர்யா என நினைத்து ரசிகர்கள் சோஷல் மீடியாவில் திட்ட ஆரம்பித்துவிட்டனர்கள். உங்களால எங்க தலைவருக்கு எவ்வளவு கஷ்டம். உடல் நிலை சரி இல்லாத இந்த வயதில் தலைவர் எப்படி இதை தாங்குவார். சோஷல் மீடியாவில் கமெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டனர். புரோபைல் போட்டோவை மாற்றியது ஐஸ்வர்யா இல்ல சவுந்தர்யா என கூறி சமாதானம் செய்தனர். இருந்தும் ரசிகர்கள் தொடர்ந்து சோஷல் மீடியாவில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version