Home Entertainment Breaking: பாக்ஸ் ஆபிஸ் மோதலுக்கு தயாராகும் அஜித் மற்றும் விஜய் படங்கள்

Breaking: பாக்ஸ் ஆபிஸ் மோதலுக்கு தயாராகும் அஜித் மற்றும் விஜய் படங்கள்

89
0

Breaking: தமிழ் திரையுலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த மிகப் பெரிய பாக்ஸ் ஆபிஸ் மன்னர்களின் படமான அஜித், விஜய் படமான ‘துணிவு’ மற்றும் ‘வாரிசு’ எப்போது வெளியாகிறது என்று பிரபல விநியோகஸ்தர் பகிர்ந்துள்ளார். 2023 பொங்கல் அன்று நடக்கவிருக்கும் மிகவும் பரபரப்பான ‘துனிவு vs ‘வாரிசு’ மோதலைப் பற்றி உறுதிபடுத்தியுள்ளனர்.

Also Read: வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா எப்போது நடைபெறும் தெரியுமா? – ரெட் ஹாட் அப்டேட்

கடந்த சில தினங்களாக அஜித் மற்றும் விஜய் படமான துணிவு மற்றும் வாரிசு பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று கூறிவந்த நிலையில், தற்போது இரண்டு படங்களும் பொங்கலுக்கு வெளியாகும் என இன்று முன்னணி திரைப்பட விநியோகஸ்தர் மற்றும் தமிழ் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியம் உறுதிப்படுத்தியுள்ளார். ‘துனிவு’ ஜனவரி 12 ஆம் தேதி வரும் என்றும், ‘வாரிசு’ ஒரு நாள் கழித்து 13 ஆம் தேதி திரைக்கு வரும் என்றும் அவர் மேலும் உறுதிப்படுத்தினார். இரண்டு சூப்பர் ஸ்டார் படங்களும் சமமான திரையில் இருக்கும் என்று உறுதியளித்தார்.

ALSO READ  Rajinikanth: நான்காவது முறையாக தாத்தாவாகும் ரஜினிகாந்த்

Breaking: பாக்ஸ் ஆபிஸ் மோதலுக்கு தயாராகும் அஜித் மற்றும் விஜய் படங்கள்

‘துணிவு’ படத்தை எச்.வினோத் இயக்குகிறார், போனி கபூர் தயாரிப்பில் அஜீத் மற்றும் மஞ்சு வாரியர் ஜோடியாக நடிக்கிறார், மறுபுறம் ‘வாரிசு’ படத்தை வம்சி பைடிபள்ளி இயக்குகிறார், மேலும் தில் ராஜு தயாரிப்பில் விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ளனர். படகுழு தரப்பில் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருப்போம்.

Leave a Reply