Ajith Kumar: வலிமை படத்திற்கு பின் அஜித் AK 61 படத்தில் நடிக்கிறார். தற்போது அஜீத் ஐரோப்பியா நாடுகளில் பைக் சுற்றுப்பயணம் சுற்றி வருகிறார்.
AK 61 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாதில் தொடங்கி 47 நாட்களுக்கு படப்பிடிப்பு நடந்த நிலையில் அதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூன் 15 ஆம் தேதி தொடங்கியதாகவும் தற்போது படப்பிடிப்புக்கு ப்ரேக்விட்ட நிலையில் படப்பிடிப்பு ஜூலை முதல் வாரத்தில் புனேவில் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கின்றனர். ஐரோப்பியாவில் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாகவும் தனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம் என்று ரசிகர் மன்றத்தை களைத்த அஜித்திற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அஜித் படம் என்றாலே அவரது ரசிகர்கள் பெரிய கட்அவுட் வைத்து திருவிழா போல் கொண்டாடுவார்கள் அஜித் ஒரு நடிகராக மற்றும் இல்லாமல் பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவார். அதுமட்டும் இல்லாது படப்பிடிப்பு முடிந்து ஓய்வு நேரத்திலும் ட்ரோன் இயக்குவதிலும் சிறந்து விளங்குவதோடு ட்ரோன் பயிற்சியாளராகவும் இருக்கிறார்.
AK 61 படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அஜித் ஐரோப்பாவை சுற்றிப்பார்க்க புறப்பட்டார். பைக், கார், கப்பல், என்று ஜாலியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அஜித்தின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை குஷி படித்தியுள்ளது. அஜித் தனது படப்பிடிப்பு முடிந்ததும் பைக் எடுத்து கொண்டு ட்ரிப் போவது வாடிக்கையான ஒன்று தான். அதுபோல் தனது BMW பைக் எடுத்து கொண்டு ஐரோப்பாவில் ட்ரிப் சென்றிருக்கிறார் அஜித். மெக்லரான் கார் நிறுவனம் ஃபார்முலா கார் பந்தயங்களில் முக்கிய பங்கு வகிக்கும். அஜித் மெக்லரான் கார் ஷோரூம்க்கு சென்று பார்வையிட்டுளார். அதன் படி அஜித் மெக்லரான் கார் அருகில் நிற்கும்படியான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலகி வருகிறது.
3 கோடி அதிவேக சொகுசு கார்
மெக்லரான் 2018 720S மாடல் கார் ஆகும். இந்த கார் இந்திய மதிப்பில் 3 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. ஐரோப்பியா நாடுகளில் பைக் சுற்றுப்பயணம் சுற்றி வருவதோடு 26 ஐரோப்பிய நாடுகளில் இந்த பயணம் நிகழ்கிறது. தற்போது அஜித் சுற்று பயணம் மேற்கொள்ளும் புகைப்படங்களை அஜித்தின் நண்பரும் பைக் ரைடருமான சுப்ராஜ் வெங்கட் இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.