Home Cinema Review Maaveeran: சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை பார்த்த மாமன்னனின் முதல் விமர்சனம்!

Maaveeran: சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை பார்த்த மாமன்னனின் முதல் விமர்சனம்!

86
0

Maaveeran: சிவகார்த்திகேயனின் சமீபத்திய சோஷியோ பேண்டஸி படமான ‘மாவீரன்’ திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் ஏற்கனவே எகிறியுள்ளது. மடோன் அஷ்வின் இயக்கத்தில் இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாகவும், மிஷ்கின் அரசியல்வாதி வில்லனாகவும் மற்றும் யோகிபாபு, சரிதா, சுனில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயனை கட்டுப்படுத்தும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திற்கு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி குரல் கொடுத்துள்ளார் என்பது சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக தெரியவந்தது. தொழில்முறை போட்டியாளர்களான இருவரின் ரசிகர்களும் இதன் மூலம் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ALSO READ  Jigarthanda Doube X Twitter Review: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ட்விட்டர் விமர்சனம்

அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் மாவீரன் படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளிவந்துள்ளது. நடிகர் மற்றும் அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை பார்த்து விமர்சனம் செய்துள்ளார். அவர் தனது டிவிட்டரில் இரண்டு தம்ஸ் அப் விரலுடன் சக்ஸஸ் என்று பதிவிட்டுள்ளார். அமைச்சரின் சைகை, படத்தின் முதல் பாசிட்டிவ் விமர்சனமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் உயர்துள்ளது.Maaveeran: சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தை பார்த்த மாமன்னனின் முதல் விமர்சனம்!

ALSO READ  Maharaja First Review: விஜய் சேதுபதியின் 'மகாராஜா' படத்தின் முதல் விமர்சனம்

இப்படத்திற்கு குரல் கொடுத்த விஜய்சேதுபதி படத்தை பார்த்த பின் ஹீரோ சிவகார்த்திகேயனுக்கு ஃபோன் கால் மூலமாக தனது பாராட்டை தெரிவித்தார் என்று கூறப்படுகிறது. ‘மாவீரன்’ படத்தை மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார், பரத் ஷங்கர் இசையமைக்க, சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிதுள்ளது.

Leave a Reply