Prince: சிவகார்த்திகேயன் நடிப்பில் ஜாத்திரத்னலு இயக்குனர் அனுதீப் கே.வி எழுதி இயக்கிய படம் பிரின்ஸ். இப்படம் நாளை (அக்டோபர் 21) உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளில் தயாராகி உள்ளது. தொடர்ச்சியாக ரூ.100 கோடி ஹிட் அடித்த சிவகார்த்திகேயன், தற்போது நேரடி தெலுங்கு படம் மூலம் தனது அதிர்ஷ்டத்தை சோதித்து வருகிறார்.
ஒரு பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரியும் பிரிட்டிஷ் பெண்ணை காதலிக்கும் சிவகார்த்திகேயனும் அதே பள்ளியில் டீச்சராக வேலை பார்ப்பவர். நாயகன் அந்த பெண்ணை கவர முயலும்போது ஏற்படும் வேடிக்கையும், மற்றும் நகைச்சுவை கலந்த காதல் காட்சிகள், இறுதியில் திருமணம் செய்துகொள்ள அவர்கள் எதிர்கொள்ளும் சவால் தான் பிரின்ஸ் படத்தின் மீதி கதை.
Old wine in a new bottle = #Prince 🙄
— Umair Sandhu (@UmairSandu) October 19, 2022
வெளிநாட்டு தணிக்கைக் குழு உறுப்பினரும் மற்றும் விமர்சகருமான உமைர் சந்துவின் தகவல்படி, படத்தில் குறிப்பிட்ட எதுவும் இல்லை என்றும், புதிய பாட்டிலில் பழைய மது இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் தனது ட்விட்டரில், “Old wine in a new bottel= #Prince 🙄” (sic) என்று எழுதினார். அவர் மேலும், இப்போதுதான் பிரின்ஸ் தமிழ் படம் பார்த்தேன், அது சலிப்பாக இருக்கிறது. “Just saw Tamil flick #Prince = Boring!!! என்று எழுதினார்.
Just saw Tamil flick #Prince = Boring !!!
— Umair Sandhu (@UmairSandu) October 19, 2022
கே.வி.அனுதீப்புடன் சிவகார்த்திகேயனின் தெலுங்கு அறிமுகம் படம் இது. இப்படத்தில் மரியா ரியாபோஷப்கா, சத்யராஜ், கார்ல் ஏ ஹார்டே மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய பேனர் கீழ் சுனில் நரங், புஸ்கூர் ராம் மோகன் ராவ் மற்றும் சுரேஷ் பாபு ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். இப்படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.