Rajinikanth: இளைஞர்கள் அனைவரும் கட்டயம் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார்.
தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்திலும் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்ற பெயர் கொண்ட நடிகர் ரஜினிகாந்த் சமீபகாலமாக தமிழில் வெளியாகும் மற்ற நடிகர்களின் புது படங்களை பார்த்து பாராட்டி வருகிறார். அந்த வகையில் கமல் நடித்த விக்ரம் படம், விஜய் சேதுபதி நடித்த மாமனிதன், ரன்வீர் சிங் நடித்த 83 போன்ற பல படங்களை பாராட்டியுள்ளார். தற்போது மாதவன் மற்றும் சிம்ரன் நடித்த ராக்கெட்ரி என்னும் படத்தை பாராட்டியதோடு இளைஞர்கள் அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளர்.
1994இல் தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானியான நம்பி நாராயணன் பாகிஸ்தானுக்கு விஞ்ஞான ரகசியங்கள் கூறியதாக கைது செய்யப்பட்டார். பின் 1998 ஆம் ஆண்டு நிரபராதி என்று சுப்ரிம் கோர்டால் விடுதலை செய்யப்பட்டார். மறைந்த ஏபி.ஜே அப்துல் கலாம் குழுவிலும் இவர் பணியாற்றியுள்ளார். நீண்ட போராட்டம் நடத்தி வெற்றி கண்ட ஒய்வு பெற்ற நம்பி நாராயணன் தனது விஞ்ஞான துறையில் தனி முத்திரையை பதித்திருக்கிறார். கலாம் குழுவில் பணியாற்றும் போதே ஏவுகணை செலுத்த எரிபொருள் தேவையை முன்கூட்டியே கண்காணிக்க கூடிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தினார்.
இவரது வாழ்க்கை வரலாற்றை தழுவி ராக்கெட்ரி தம்பி எஃபெகட் என்ற பெயரில் நடிகர் மாதவம் படமாகியதோடு அந்த படத்தில் அவருடன் இணைந்து சிம்ரன் நடித்துள்ளார். சாம் சி.எஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் முதல் முதலில் மாதவன் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்தை பார்த்த ரஜினி தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு கடிதத்தை அனுப்பியுள்ளார்.
ரஜினி பாராட்டு:
ராக்கெட்ரி திரைப்படம் – அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் – குறிப்பாக இளைஞர்கள். நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்ம பூஷன் திரு. நம்பி நாராயணன் அவர்களின் வரலாறை மிக தத்ரூபமாக நடித்து படமாக்கி, இயக்குநராக தனது முத படத்தில் தலைசிறந்த இயக்குநர்களுக்கு இணையாக தானும் நிரூபித்திருக்கிறார் மாதவன். இப்படி ஒரு திரைப்படத்தை கொடுத்ததற்காக அவர்களுக்கு எனது நன்றிகளும், பாராட்டுகளும் என்று ரஜினிகாந்த் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.