Arya: திரையுலகில் அதிகம் தேடப்படும் ஆக்ஷன் ஹீரோக்களில் ஆர்யாவும் ஒருவர். இவர் கடைசியாக ‘சார்பட்ட பரம்பரை’ மற்றும் ‘கேப்டன்’ ஆகிய படங்களில் நடித்தார். இன்று, அவர் கடுமையாக உடற்ப்யிற்சி செய்யும் வுடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேஸ்சில் பகிர்ந்தார். அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட நான்கு படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிளாக்பஸ்டர் குத்துச்சண்டை விளையாட்டு நாடகத்தின் தொடர்ச்சியான ‘சார்பட்ட பரம்பரை 2’ படத்திற்காக ஆர்யா மற்றும் பா ரஞ்சித் மீண்டும் இணைகிறார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும், மனு ஆனந்த் இயக்கத்தில் ஸ்பை ஆக்ஷன் த்ரில்லரான ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தில் கௌதம் கார்த்திக்குடன் ஆர்யா இணைகிறார். இதற்கிடையில், இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நீண்ட நாட்களாக தள்ளிப்போன பிரம்மாண்டமான படமான ‘சங்கமித்ரா’வில் விஷாலுடன் ஆர்யா இணைவதாக கூறப்பட்டது.
ஆர்யா இன்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ப்ராஜெக்ட் புத்துயிர் பெற்றதாகவும், அவர் சங்கமித்ராவில் இருப்பார் என்றும் உறுதிப்படுத்தினார். அதன்பின், தெலுங்கு நடிகர் வெங்கடேஷின் 75வது படமான ‘சைந்தவ்’ படத்திலும் வில்லனாக நடிக்கிறார். மேலும் அவர் பகிர்ந்த வீடியோ கிளிப்பில் ஆரியா கடுமையான உடற்ப்பயிற்சி செய்வதைக் காண முடிந்தது. அவர் ஒரு ஃபிட்னஸ் ஃப்ரீக் என்பது தெரிந்ததே, அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.