Home Cinema News Vijay Sethupathi: விஜய் சேதுபதி எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய திகில் படம்

Vijay Sethupathi: விஜய் சேதுபதி எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய திகில் படம்

0

Vijay Sethupathi: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிப்பது மட்டும் இல்லாமல் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரத்தை எதிர்பார்ப்பதை விட சிறப்பாக ஏற்று நடித்து விடுவார். தமிழ் சினிமாவில் பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய்சேதுபதி ஒரு ஆண்டில் 10 அல்லது 12 படங்களில் கமிட்டாகி நடித்துவிடுவார்.

Also Read: Vijay Sethupathi: முதல் முறையாக தனது பள்ளி பருவ காதலை கூறி உருக்கும் விஜய்சேதுபதி

1996 ஆம் ஆண்டு சினிமாவில் நுழைந்து சின்ன சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடித்த விஜய்சேதுபதி, 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பிருவ காற்று படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார் விஜய்சேதுபதி, அதை தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும் என்ற அடுத்தடுத்து படங்கள் அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. தொடர்ந்து ஹீரோவாக நடித்திருந்தாலும் அவர் குணச்சித்திர வேடம், வயதான தோற்றம், தந்தை, திருநங்கையாக தற்போது முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து அனைத்து நடிகர்கள் மத்தியில் தனித்து நிற்கிறார்.தற்போது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகர்களில் ஒருவராக உயர்ந்து அனைவராலும் ‘மக்கள் செல்வன்’ என்ற அன்பான பெயரையும் வாங்கியுள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான காத்து வாகுல ரெண்டு காதல், விக்ரம் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Vijay Sethupathi: விஜய் சேதுபதி எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் புதிய திகில் படம்

தற்போது வெளியாகியுள்ள புது தகவல் என்னவென்றால் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி எச். வினோத் இயக்கத்தில் ஒரு புது படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சதுரங்க வேட்டை படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான வினோத் தீர்ன, நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார்.தற்போது இவர் இயக்கத்தில் அஜித் நடிப்பில் AK 61 படம் உருவாகி வருகிறது. AK 61 படம் நிறைவு பெற்ற பின் அடுத்ததாக விஜய்சேதுபதி மற்றும் வினோத் இயக்கத்தில் ஒரு புதிய திகில் படம் உருவாக இருகிறது. இப்படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகிறார். பீட்சா படத்திற்கு பின் அடுத்த ஒரு திகில் படத்தில் நடிக்க இருப்பதால் ரசிகர்களுக்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version