Home Cinema News Vijay: பீஸ்ட் படத்தின் அப்டேட் வெளியாகும் தேதி அறிவிப்பு

Vijay: பீஸ்ட் படத்தின் அப்டேட் வெளியாகும் தேதி அறிவிப்பு

61
0

Vijay: பீஸ்ட் படத்தின் போஸ்டர் விரைவில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி அன்று வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Vijay: பீஸ்ட் படத்தின் அப்டேட் வெளியாகும் தேதி அறிவிப்பு

விஜய் ரசிகர்கள் இந்த பொங்கலுக்கு பீஸ்ட் படத்திலிருந்து அப்டேட் வரும் என எதிர்பார்த்து காத்திருந்தார்கள். கடைசியில் விஜய் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. பீஸ்ட் படத்திலிருந்து பாடல் அல்லது போஸ்டர் வெளியாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் தற்போதுவரை எந்த அறிவிப்பும் படக்குழுவிடமிருந்து வரவில்லை என்ற வருத்தத்தில் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது. தற்போது தற்போது இருதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்துகொண்டுவருகிறது. மேலும் கடந்த டிசம்பர் மாதம் விஜய் முதல் ஆளாக தனது டப்பிங் பணியை முடித்துவிட்டார் என்ற தகவலும் சில நாட்களுக்கு முன் வெளியானது. அதுமட்டும் இல்ல தங்கக்கடத்தலை மையப்படுத்தி பீஸ்ட் படத்தின் கதைக்களம் உருவாகியிருப்பதாகவும், அதோட விஜய் ராணுவ வீரராக படத்தில் நடிப்பதாகவும் சோஷல் மீடியாவில் தகவல்கள் பரவிவருகிரது.

ALSO READ  AK: அஜித் குமார் வெளிநாட்டுப் பயணத்தின் போது அவரை சந்தித்த தமிழ் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்

தற்போது பீஸ்ட் படத்தின் போஸ்டர் ஒன்று விரைவில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி அன்று வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 26 பீஸ்ட் படத்திலிருந்து விஜய்யின் போஸ்டர் ஒன்று வெளியாகவிருப்பதாக சோஷல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். சிலர் ஏமாற்றாமல் இருந்தால் சரி என்று சோஷல் மீடியாவில் கமன்ட் செய்து வருகின்றனர்.

ALSO READ  Kollywood: அடியே படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லரை நடிகர் தனுஷ் வெளியிட்டார்

பீஸ்ட் படம் ஏப்ரல் மாதம் வெளியிடுவதாக சில நாட்களுக்கு முன்பு படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது அனைவருக்கும் தெரிந்த தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply