Vijay: பாலிவுட் நடிகரான சல்மான் கான் மாஸ்டர் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யப்போவதாக அதில் விஜய் சேதுபதி பாத்திரத்தில் ஷாஹித் கபூர் நடிக்கப்போவதாக. கடந்தாண்டு செய்திகள் வெளியானது.
கந்தாண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் மாஸ்டர். விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடித்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களைப்பெற்றாலும் மாஸ்டர் படம் வசூலில் சாதனைப்படைத்தது.
மாஸ்டர் படத்தை தெலுங்கிலும் மற்றும் மலையாளத்திலும் டப் செய்து வெளியிட்டனர். தற்போது பாலிவுட் நடிகரான சல்மான் கான் மாஸ்டர் படத்தை பார்க்க அவருக்கு மாஸ்டர் படம் மிகவும் பிடித்துப்போக ஹிந்தியில் ரீமேக் செய்யப்போவதாக அதில் விஜய் சேதுபதி பாத்திரத்தில் ஷாஹித் கபூர் நடிக்கப்போவதாக. கடந்தாண்டு சோஷல் மீடியாவில் செய்திகள் வெளியானது. அதன் பிறகு சல்மான் கான் சிலபல காரணங்களால் அப்படத்தில் இருந்து விலகினார். மாஸ்டர் படத்தை தற்போது மீண்டும் ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர். இரு முன்னணி பாலிவுட் நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாம். வரும் மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது.
2017 ஆம் ஆண்டில் மாபெரும் வெற்றி திரைப்படம் விக்ரம் வேதா. இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்போவதாகவும், இதில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சைப் அலி கான் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.