Home Cinema News Ajith Kumar: விக்னேஷ் சிவன், அஜித் குமாரின் காணாத புகைப்படங்களை பகிர்ந்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Ajith Kumar: விக்னேஷ் சிவன், அஜித் குமாரின் காணாத புகைப்படங்களை பகிர்ந்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

0

Ajith Kumar: விக்னேஷ் சிவன், அஜித் குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததோடு, AK62 படத்திற்காக அவருக்கும் முழு குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை அனுப்பியுள்ளார். AK 62 படத்தை இதற்க்கு முன் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தார், ஆனால் சில பல காரணங்களால் அந்த படத்தில் இருந்து அவர் விலகிவிட்டார். தற்போது அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி படத்தை இயகுகிறார். தற்போது உழைப்பாளர் தினம் மற்றும் அஜித்தின் பிறந்தநாளான இன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த படத்திற்க்கு “விடாமுயற்சி” என்று டைடில் வைக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நாம் இதுவரை காணாத சில புகைப்படங்களை பகிர்ந்து நடிகர் அஜீத் குமார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அஜித் மீது அவருக்கு அளவுகடந்த அன்பு’ இருப்பதாகவும் விக்னேஷ் கூறியுள்ளார்.

Ajith Kumar: விக்னேஷ் சிவன், அஜித் குமாரின் காணாத புகைப்படங்களை பகிர்ந்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

“அன்புள்ள #அஜித் சார். நிபந்தனையற்ற அன்பு, என்றும் நிரந்தரம். #விடாமுயற்சி #மகிழ்திருமேனிசார் @அனிருத் @லைக்காபுரொடக்ஷன் #Ak62 க்கு அனைத்து நல்வாழ்த்துக்களும்.” என்று விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்தார். அஜித் குமார் மீதான இத்தகைய நேர்மறையான மனப்பான்மை மற்றும் அன்புக்காக சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் பாராட்டப்பட்டு வருகின்றார் இயக்குனர் விக்னேஷ் சிவன். மேலும் பலர் ‘AK63 உங்களுடையதாக இருக்கும்’ என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version