Home Cinema News Vetrimaaran: ஜூனியர் என்டிஆர், மகேஷ் பாபு மற்றும் அல்லு அர்ஜுன் சந்தித்தது குறித்து வெற்றிமாறனின் பரபரப்பான...

Vetrimaaran: ஜூனியர் என்டிஆர், மகேஷ் பாபு மற்றும் அல்லு அர்ஜுன் சந்தித்தது குறித்து வெற்றிமாறனின் பரபரப்பான அறிக்கை!

0

Vetrimaaran: தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறனின் சமீபத்திய படமான விடுதலை பகுதி: 1 மார்ச் 31 அன்று வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் சூரி நாயகனாகவும், பவானி ஸ்ரீ நாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். வாத்தியார் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ஏப்ரல் 16 ஆம் தேதி ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வெளியிட உள்ளார்.

விடுதலை 1 படத்தின் தெலுங்கு பதிப்பு வெளியாவதற்கு முன்னதாக விடுதலை 1 படத்தின் நடிகர்கள் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களைச் சந்தித்தனர்.தெலுங்கு நடிகர்களை வைத்து படம் செய்வீங்களா என்று நிருபர் ஒருவர் கேட்டார். வெற்றிமாறன் அல்லு அர்ஜுனுடன் ஒரு பாத்திரத்திற்காக விவாதித்ததாகவும், “அதன் பிறகு நான் மகேஷ் பாபுவை சந்தித்தேன், பின்னர் லாக்டவுனுக்குப் பிறகு, ஜூனியர் என்டிஆரைச் சந்தித்தேன், எனவே, கண்டிப்பாக நடக்கும் ஆனால் நான் திரைப்படங்களை உருவாக்க சிறிது நேரம் எடுத்துக்கொள்கிறேன்.

Vetrimaaran: ஜூனியர் என்டிஆர், மகேஷ் பாபு மற்றும் அல்லு அர்ஜுன் சந்தித்தது குறித்து வெற்றிமாறனின் பரபரப்பான அறிக்கை!

ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்திற்கு செல்ல எனக்கு நிறைய நேரம் தேவை இருக்கு. அதுதான் பிரச்சனை.” முதல் படம் ஜூனியர் என்.டி.ஆரா அல்லது அல்லு அர்ஜுனுடன் இருக்குமா என்று நிருபர் கேட்டபோது. யார் என்பதை காலம்தான் சொல்ல வேண்டும் என்றார் வெற்றி மாறன். மல்டி ஸ்டாரராக இருக்க முடியுமா என்று நிருபர் கேட்டதற்கு, “இருக்கலாம்” என்றார். மேலும் விடுதலை 1 பற்றி வெற்றி மாறன் மேலும் பேசுகையில், “இந்த படம் எல்லை தாண்டி ஓடும் என்று நம்பியதற்காக அல்லு சார் அவர்களுக்கு நன்றி என்றார் வெற்றிமாறன்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version