PS-1: இயக்குனர் மணிரத்னத்தின் காவியத் திரைப்படம் ‘பொன்னின் செல்வன் (PS-1) செப்டம்பர் 30 ஆம் தேதி பான் இந்தியா படமாக உலகளாவில் வெளியிடப்படுகிறது. ஏ.ஆர் ரஹ்மன் இசையில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லீக்ஷ்மி, சோபிதா, பிரபு, ஆர் சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ் ராஜ், ரஹ்மான் மற்றும் ஆர் பார்த்திபன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
Also Read: சியான் விக்ரமின் கோப்ரா டிரைலர் இந்த தேதியில் வெளியாக உள்ளது
சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “சோழ சோழன்” வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. மணிரத்னம், சுஹாசினி மணிரத்னம், சீயான் விக்ரம், கார்த்தி மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி அங்குள்ள வர்த்தக வட்டாரம் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. லைக்கா புரொடக்ஷன் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இப்படத்தை பிரமாண்ட பொருள் செலவில் இருபாகங்களாக தயாரிக்கிறது.
இந்த நிகழ்விற்குப் பிறகு டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் தில் ராஜு லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்திடமிருந்து ‘பொன்னியின் செல்வன்’ தெலுங்கு பதிப்பின் திரையரங்கு உரிமையை வாங்கியுள்ளார் என்பது இப்போது தெரியவந்துள்ளது. தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தற்போது தளபதி விஜய்யின் ‘வாரிசு’ மற்றும் ராம் சரண் தேஜா மற்றும் கியாரா அத்வானி நடிக்கும் ஷங்கரின் ‘ஆர்சி 15’ ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் திரைகான இருக்கும் பொன்னியின் செல்வன் என்னும் காவிய திரைப்படம் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.